இது பெங்களூரின் லால்பாக் தாவரவியல் பூங்கா வளாகத்திற்குள் இருந்த நூற்றாண்டுகள் பழமையான Krumbiegel Hall தாவரவியல் பூங்கா நிர்வாகிகளால் இடிக்கப்பட்டு தான்தோன்றித்தனமாக மீண்டும் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கும் படம்.இதற்கு 97 லட்ச ரூபாய் செலவானதாம்.
conservation பற்றிய அடிப்படை அறிவோ புரிதலோ இல்லாதவர்கள் ஒரு பழைய கட்டிடத்தை புதுப்பிக்கையில் அதைக் கந்தரகோலம் செய்து விடுவார்கள்,இங்கும் அது தான் நிகழ்ந்தது, conservation consultants என்பவர்கள் B.Arch இளங்கலை பட்டப்படிப்பு படித்த பின் இரண்டு வருடம் முதுகலை M.Arch in conservation படித்து அந்த துறையில் தனித்து பணிபுரிவார்கள், அவர்கள் மட்டுமே ஒரு பாரம்பர்யம் உள்ள கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க முடியும், அவர்கள் மட்டுமே அந்த கட்டிடம் கொண்டிருந்த proportion ,golden ratio, இவற்றை மீட்டெடுக்க முடியும்.
இந்த Krumbiegel Hall கட்டிடத்தை தலபாஸ்திரி செய்து இஷ்டத்திற்கு band,cornice proportion எதுவுமுன்றி அமைத்து முக்கோண வடிவ pedimentன் கீழே இருந்த அந்த Greek Ionic பாணி தூண்களை அலட்சியமாக தவிர்த்துவிட்டு எதோ அனாதை பாணி செவ்வக capitals மற்றும் base அமைத்ததைப் பாருங்கள்.
அதனால் தான் பழைய பாரம்பர்ய சின்னங்களை யுனெஸ்கோ மெனக்கெட்டு கண்காணிக்கிறது , கண்காணிக்காமல் விட்டால் அதில் இவர்கள் கண்ணறாவியான மாற்றங்களை தான்தோன்றித்தனமாக செய்து விடுவார்கள், வெட்கமின்றி ரிப்பன் வெட்டித் திறந்து படமெடுத்து பீத்திக் கொள்வார்கள்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது வள்ளுவன் வாக்கு.
#Krumbiegel_Hall,#lalbagh,#conservation,#லால்பாக்,#பழமை_மாறாமல்_புதுப்பித்தல்,#conservation_consultant, #greek_ionic