1991 ஆம் ஆண்டு இசைஞானி இசையில் நடிகர் விஜயன் இயக்கத்தில் மலையாளம் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தேவன் கதாநாயகனாக நடித்து, விவித பாரதி என்ற தனியார் வானொலி நேரத்தில் பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட படம் புதிய ஸ்வரங்கள்.
படம் வணிகமாகாததால் பிரசாத் லேபிற்கு பணம் தர முடியாமல் அங்கேயே can களில் பல ஆண்டுகள் முடங்கிப் போய் பின்னாளில் தொலைக்காட்சியில் ஆவது வெளியிடலாம் என்று can களை திறந்து பார்க்க அத்தனை stock முழுக்க பாழாகியிருந்தது.
நடிகர் விஜயன் இயக்குனர் அவதாரம் நிகழவில்லை, அவர் வறுமையில் உழன்று இறந்தும் போனார்.
இப்படத்தின் பாடல்கள் இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கு மனப்பாடமாகியிருக்கும்,
ஓ வானம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல் என்ற பாடல் அத்தனை இனிமையானது ,டூயட்டாக தாசேட்டா உமா ரமணன் பாட, ஸோலா இசைஞானி பாடினார் ஸோலோவின் இடையில் பரதநாட்டிய ஜதி அழகாக வரும், கவிஞர் கங்கை அமரன் வரிகள்.
ஒரு காதல் ராகம் பாடும் பூவிது ,என் ராக தேவன் உன்னைப் பாடுது என்ற பாடலை ஜானகியம்மா,மனோ பாடினர்,இதிலும் பரத நாட்டிய தாளக்கட்டில் பாடல் உருவாகியிருக்கும்,கவிஞர் வாலி வரிகள்.
புது காவேரி கரைமீது அமராவதி என்ற பாடலை எஸ்பிபி , சித்ரா பாடினர்,கவிஞர் கங்கை அமரன் வரிகள்,.இதிலும் பரத நாட்டிய தாளக்கட்டில் பாடல் உருவாகியிருக்கும்.
படத்தை சந்தைப்படுத்த வேண்டி அச்சடித்த பொங்கல் வாழ்த்து அட்டைகளைப் பாருங்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திர பாபு அவர்கள்,
நடிகர் தேவன் அதன்பிறகு பிரதாப்,கேப்டன்,ஆனஸ்ட்ராஜ்,
பாட்ஷா போன்ற படங்களில் துரோகி நண்பனாக வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்தும் போனார்.