இன்று கிண்டி வாகன நெரிசலில் எடுத்த படம் இது.
படத்தில் சாலையின் median தடுப்பு சுவரில் 3M என்ற அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும் Median Marker, அத்தனை தரமான பொருள், ஒவ்வொரு பத்து அடிக்கும் ஒன்றாக பொருத்தி உள்ளனர் ,
இதன் பயன் வளைவான சாலையில் fast lane ல் செல்லும் வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதிவிடாத படி இந்த Median Marker ஒளியை எதிரொலித்து வாகனத்துக்கு வழிகாட்டுவதாகும்.
இதில் மெத்தனமாக இரண்டு ஸ்க்ரூ மட்டும் இறக்கி பொருத்தியதைப் பாருங்கள், இதற்கு நான்கு heavy duty bolt பொருத்தினால் தான் வாகனங்களின் அதிர்வில் , வாகனங்கள் உரசினால் இந்த Median Marker கழன்று வராது, நான் இன்று வாகன நெரிசலில் என் வாகனத்தில் ஓரம் செல்கையில் பார்த்ததை இங்கே பகிர்கிறேன்,
நெடுஞ்சாலைத்துறை மெத்தனமாக இந்த இரண்டு ஸ்க்ரு மட்டும் பொருத்தியதால் பல reflector உடைந்தும் காணாமலும் போய்விட்டதை தொடர்ந்து பார்க்கிறேன் ,பல மேம்பாலங்களில் reflector கழன்று விழுந்திருப்பது கண்கூடு , இந்த படங்கள் பாருங்கள், reflector என்றால் இரண்டு ஸ்க்ரூ தான் என பிடிவாதமாக இறக்கியிருக்கின்றனர்.
இந்த பொதுப்பணிகளுக்கு எல்லாம் snag என்ற பணிமுடிவு ஆய்வு கிடையாதா? நெடுஞ்சாலைதுறையில் எத்தனை பொறியாளர் பதவிகள் படிநிலை உண்டு , இளநிலை பொறியாளர், முதுநிலை பொறியாளர், உதவி பொறியாளர் என எத்தனை பேர், ஒருவருமா இந்த இரண்டு ஸ்க்ரூ கருமித்தனத்தை cost cutting ஐ கண்டு கொள்ளவில்லை? இப்படி மிச்சம் செய்து எந்த கஜானாவை நிரப்பிட முடியும்?