மக்கள் பூங்கா என்ற சென்னையின் முன்னாள் உயிரியல் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா


24 ஜூலை 1985 ஆம் ஆண்டு வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முழு வீச்சில் துவங்கப்பட்டது, 1973 ஆம் ஆண்டு முதல் அதற்கான feasible study,  திட்ட வடிவமைப்பு ,திட்ட அனுமதி , நிலம் கையகப்படுத்தும் பணிகள் , கட்டுமானம் என  இப்பணிகள் சுமார் 8 வருடங்கள் நடந்துள்ளன,இதற்கான மொத்த திட்டசெலவு 3 கோடி ரூபாய்,தற்போதைய மொத்த பரப்பளவு 1490 ஏக்கர்.

பழைய உயிரியல் பூங்காவின் பெயர் Madras zoo என்பதாகும், பெருமைமிகு ரிப்பன் கட்டிடத்தின் பின்னால் தற்போது நேரு ஸ்டேடியம் (1993 துவக்கம் ) அமைந்துள்ள பரந்த நிரப்பரப்பில்  Peaples Park என்ற மக்கள் பூங்கா அன்று இருந்தது, 

அதன் உள்ளே இந்த Madras zoo சுமார் 114 ஆண்டு காலமாக இயங்கி வந்துள்ளது, அதன் முன்னர் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அருங்காட்சிய வளாகத்தில் (செத்த காலேஜ்) 300 விலங்குகளுடன் 1855 முதல் 1863 ஆம் ஆண்டு வரை ஸ்காட்லாந்து மருத்துவர் Edward Green Balfour தலைமையில் இயங்கியுள்ளது.

மெரினா கடற்கரைக்கு செல்ல அன்று புறநகர் மின் தொடர் வண்டி இல்லை,இருந்தும் மக்கள் கூட்டம் அள்ளும்,  மக்களின் கேளிக்கைக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் மெரினாவுக்கு ஈடான ஒரு இடத்தை நிர்மாணிக்க எண்ணிய அன்றைய மெட்ராஸ் மாகாண கவர்னர் Sir Charles Trevelyan ரிப்பன் மாளிகைக்கு பின்னால் அமைந்த இந்த 116 ஏக்கர் நிலப்பரப்பை மக்கள் கேளிக்கைக்கு பயன்படுத்த எண்ணினார், 

அதன் படி சுமார் 10 ஆண்டுகால திட்டப்பணிகளின் பின்னர் 1859 ஆம் ஆண்டு இங்கே மக்கள் பூங்காவை துவங்கினார், இதனுள்ளாக 11 இயற்கை நீர்நிலை குளம் குட்டைகள் அமைந்திருந்தன, ஒரு பெரிய பொது நீச்சல் குளம்,பொது குளியல் அறைகள், 8.8 கிமீ சுற்றளவு கொண்ட வெளிச்சுற்று நடைபாதை, டென்னிஸ் மைதானங்கள் குதிரையேற்றம் இவற்றை நிர்மாணித்து, உயிரியல் பூங்காவையும் இங்கு மாற்றித் துவக்கினார்.

இந்த Madras zoo தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,
காக்கும் கரங்கள் 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் , இதில் கருப்பு வெள்ளையில் "அல்லித்தண்டு காலெடுத்து" பாடலில் முழுக்க இந்த Madras zoo வருகிறது, அதில் அல்லிக்குளம் அதில் அமைந்திருந்த படகு சவாரியில் SSR ,விஜயகுமாரி, அவர்கள் குழந்தை மூவர் துடுப்பிட்டு மரப்படகில் பயணிப்பார்கள், குளத்தை கடக்க அழகிய பெரிய மரப்பாலம் கூட உண்டு,படகு அதன் உள்ளே நுழைந்து பயணிக்கும் , midget rail என அழைக்கப்பட்ட சிறுவர் ரயில் சவாரி , யானை சவாரி, கூண்டுப்புலி, சிறுத்தையை தூக்கி கொஞ்சும் காவலாளி,நவநாகரீக உடை அணிந்த மனிதக் குரங்கை நடைபயிற்சி அழைத்துச்செல்லும் சிப்பந்தி என  அத்தனையும் அப்பாடலில் காணலாம்,

மற்றொரு தமிழ் திரைப்படம் என்றால் 1970 ஆம் ஆண்டு வெளியான எங்க மாமா, இது வண்ணப்படம், இதில் வரும் பாடல் 
" நான் தன்னந்தனிக்காட்டு ராஜா" இதில் இரு யானைகள் தவிர மற்ற விலங்குகளை  காணமுடியவில்லை, ஆனால் madras zoo, midget rail சவாரியும் ,பெரிய ராட்டினமும்  பாடல் முழுக்க வருகிறது. 

London zoo விற்கு நிகராக இங்கே madras zoo கட்டமைக்கப்பட்டுள்ளது, அதனால் தான் 1931 ஆம் வருடம் பூங்கா புறநகர் ரயில் நிலையம் மக்கள் உபயோகத்துக்கு  திறக்கையில்  இந்தப்  பெயர் வைத்தனர்.

 ஜப்பான் , அமெரிக்காவின் பேர்ள் ஹார்பர் மீது தாக்குதல் நடத்திய
 7 டிசம்பர் 1941 ஆம் ஆண்டின் பின்னர் இங்கு ஆட்சியாளர்களுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது, ஒரு வேளை ஜப்பான் சென்னை மீதும் விமான குண்டுகள் வீசி தாக்கினால் என்ன ஆகும்? என்ற போர் பதட்டத்தில், ஊரே பெருமளவில் காலியாகி விட்ட நிலையிலும், ஒருவேளை இந்த 300 விலங்குகள் சென்னை தெருக்களில் தப்பி ஓடி ஜார்ஜ் கோட்டைக்குள், ஜார்ஜ் டவுனுக்குள் புகுந்து விடாமல் இருக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிருந்த விலங்குகளை , பெரிய பறவைகளை  விஷவாயு வைத்து கொன்றுள்ளனர், வேட்டைக்காரர்களை நியமித்து துப்பாக்கி குண்டுக்கும் இறையாக்கியுள்ளனர், 

நரி,ஓநாய்களை தூக்கில் ஏற்றியும்  கொன்றுள்ளனர், கண்காட்சிக்கு வைத்து இருந்த விஷப்பாம்புகளை கொதிக்கும் நீரில் இட்டும் அதுநாள் வளர்த்த ஊழியர்களே கொன்றுள்ளனர், 

இந்த கோர நிகழ்வு ஏப்ரல் 14, 1942 ஆண்டு போகிப்பண்டிகையில் துவங்கி சுமார் ஒரு வார காலம் நடந்துள்ளது.

இன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயிலில் செல்வோர் பூங்கா ரயில் நிலையத்தில் இறங்குவர், எனக்கு பால்யத்தில் இருந்த மிகப்பெரிய ஐயம் என்றால் எங்கே அந்த பொல்லாத பூங்கா?என்பதே, 

சுற்றிலும் வயிற்றை பிரட்டும் சாக்கடை நாற்றம், கிழக்குபுறம் போலீஸார் AK47 உடன் காவல் நிற்கும் சென்ட்ரல் ஜெயில் மதில் சுவர் ஒட்டிய வெளியூர் ரயில் மற்றும் fast ரயிலுக்கான மூன்றாம் நடைமேடை , 

வேறெந்த புறநகர் ரயில் நிலையங்களிலும் காண முடியாத  மேற்குப் பகுதியில் அமைந்த இரட்டை வெளியேற்ற நடைமேடைகள் (double discharge platforms), எல்லாம் சரி பூங்கா எங்கே? என திகைத்துள்ளேன்,

அதன் பிறகு கூட 1999 ஆம் ஆண்டு பறக்கும் ரயிலுக்கு நிலையம் அமைக்கையில் காணாமல் போன பூங்காவின் வரலாறு தெரியாமல் . "பூங்கா நகர்" என பிடிவாதமாக பெயர் வைத்தனர்.

பால்யத்தில் கந்தசாமி கோயில் குளம் ஒட்டி park town benefit fund என்ற 90 களில் திவாலான நிதி நிறுவனம் 
சென்றுள்ளேன்,அப்போது கூட இங்கே நெரிசலான பகுதிக்கு park town என எதற்கு பெயர் வைத்துள்ளனர் என தீவிரமாக யோசித்துள்ளேன்.

இந்த மக்கள் பூங்கா 1973 ஆம் ஆண்டு வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு , வடக்கே  பக்கிங்காம் கால்வாய் (காவாய்) கிழக்கே கூவம்  என நாற்றம் சகித்தபடி இங்கே தான் இருந்துள்ளது.

1972-73 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு இந்த சரித்திர பெருமைமிகு உயிரியல் பூங்காவை மிகவும் பொருத்தமான , இணக்கமான இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 

காரணம்  மாநகராட்சி உயிரியல் பூங்கா வளாகம் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருந்தது, 
வடக்கில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் இரைச்சல், கரி எஞ்சின் விடும் தொடர்வண்டி புகை, கிழக்கே உள்ள மெட்ராஸ் துறைமுகம் அதன் உப்புக்காற்று, கப்பல்களின் புகையினால் கரியமில வாயு வெளியீடுகள், எண்ணூர் அனல் மின் நிலையம் தந்த நச்சுப்புகை மற்றும் பின்னி டெக்ஸ்டைல்ஸ் வெளியிட்ட ஆலைக்கழிவு ,புகை , வடக்குப் பகுதியில் உள்ள பல்வேறு பொறியியல் தொழிற்சாலைகள், மேற்கே மூர் மார்க்கெட்டின் கூச்சல்,  பூதாகரமான வணிக வளர்ச்சியினால்  நகருக்குள் இடப் பற்றாக்குறை எழுந்தது,தொடர்ந்து அதிகரித்து வந்த மாசுபாடுகளால்  விலங்குகளுக்கு சுவாச நோய்கள் பலவும் வந்துள்ளது, சிங்கம் புலி யானை குரங்கு சிறுத்தை என எதுவும் இரவில் கூட தூங்காமல் தவித்து தம் ஆயுள் முடியும் முன் இறந்து போயுள்ளன  , 

கிண்டி சிறுவர் பூங்கா, ஏனைய  ரிசர்வ் வனப்பகுதிகள் , பள்ளிக்கரணை ஏரி மற்றும் நன்மங்கலம் மற்றும் வண்டலூர் ரிசர்வ் வனப்பகுதிகள்  ஆகியவை பரிசீலிக்கப்பட்டன, அமைந்தகரை அருகே உள்ள ஷெனாய் நகர் பூங்கா பகுதி கூட பரிசீலிக்கப்பட்டது, இறுதியாக வண்டலூர் உயிரியல் பூங்கா அமையுமிடமாக முடிவுசெய்யப்பட்டு அங்கே நிர்மாணிக்கப்பட்டது,அந்த  வளாகத்தில் உள்ள பழமையான சின்னகுன்னுமலையை சுற்றி மிகவும் தொலைநோக்காக prey and predator பாணியில்  அதாவது விலங்குக்கு கூண்டு, இரைக்கு அகழி, பார்வையாளருக்கு தடுப்பரண்  வடிவமைப்பில் அமைந்துள்ளது நம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.

இப்போது வண்டலூர் உயிரியல் பூங்கா முகப்பில்  காண்கிற பாறைகள் நீர்வீழ்ச்சி கொண்ட அழகிய முகப்பு எம்ஜியார் திரைப்படங்களில் கலை அலங்காரம் செய்த கலை இயக்குனர் K.அங்கமுத்து அவர்கள் வடிவமைத்ததாகும், 

இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவை வடிவமைத்தது Ar. ராஜா சிங் என்பவரின் kingsway consultant என்ற arch & structural design வடிவமைப்பு நிறுவனத்தார், கட்டுமானம் செய்தவர்கள் Tansi நிறுவனத்தார்,உலகின் தலைசிறந்த மிருகக்காட்சி சாலையாக இது திகழ வேண்டும் என்ற நோக்கில், புதிய மிருகக்காட்சிசாலையின் வடிவமைப்பு பற்றி விவாதிக்கவும்,திறனாய்வு செய்யவும், அப்போதைய திட்டகுழு இயக்குநர், எஸ். சுப்பராயலு நாயுடு, துணை இயக்குநர் என். ரமேசன் ஆகியோர் செப்டம்பர் 1981 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் உயிரியல் பூங்காக்களுக்குச் சென்று case study செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பார்க்கையில் அதன் நான்கு புறமும் கண்களை அகல விரித்து சுற்றிப் பாருங்கள்,அதில் என்ன தெரிந்தாலும் அதை தேடிப் படித்தாலும் கூட போதும்,அதில் அத்தனை வரலாறு அடங்கியுள்ளது, அள்ள அள்ள புதையல் போன்ற வரலாற்றுப் புதையல் அவை.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)