எங்கிருந்தோ வந்தாள் (1970) திரைப்படத்தில் சகுந்தலை துஷ்யந்தன் பாடல் வருகிறது, மனநிலை பாதிக்கப்பட்டவரான சிவாஜியை பார்த்துக் கொள்ள வேண்டி ஜெயலலிதா பணக்கார வீட்டிற்குள் தாதியாக வருகிறார்,இவர் நடன மகளிர் வீட்டுப் பெண், ஜெயலலிதா ஓரிரவு மழையில் நனைந்தவரை சலனப்பட்ட மனநிலை பிறழ்ந்த சிவாஜி வல்லுறவு கொள்கிறார்,
மறுநாள் இவரை மீண்டும் மனநல மருத்துவமனைக்கு அண்ணன் பாலாஜி அடித்து அனுப்புகிறார்.
அவரை அடிக்காமல் தடுத்து , மன்னித்து ஏற்றவர் சிவாஜியை குணப்படுத்த வேண்டி உடன் தங்கி விடுகிறார் ஜெயலலிதா, அப்போது சகுந்தலை துஷ்யந்தன் கதை புத்தகம் படிக்கையில் இந்த பாடல் வருகிறது.
இசை எம்எஸ்வி அவர்கள்,
இந்த காவியப் பாடலில் சாகுந்தலத்தை கவிஞர் கண்ணதாசன் ஒரே பாடலில் ரசம் பிழிந்து தந்துவிட்டார், மாறன் தொடுத்த கணைகளினாளவள் மன்னனுடன் கலந்தாள் என்ற அற்புதமான பாடலை சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் K.லீலா பாடியுள்ளார்கள்.
இப்படத்துக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள் K.மஸ்தான் மற்றும் விஸ்வநாத் ராய், இயக்கம் A.C.திருலோகசந்தர்.