ரஃபேல் வாட்ச் என்று பெயர் பட்டி தொட்டியிலும் ஒலித்ததே என்று தேடிப்பார்த்தால் இது தான் அந்த வாட்சின் close-up படங்கள்,நான் ஒரு automatic watch ஆராதகன் என்பதால் இதை அறியத் தேடினேன்,கிடைத்த தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்.
எப்படி வீடு மனை வாங்க தரகர் உண்டோ அது போல ஸ்விஸ் வாட்ச் வாங்க விற்க கூட தரகர்கள் விற்பனை பிரதிநிதிகள் உண்டு, மன்னர் ஆட்சி காலத்தில் இந்த தரகர்கள் கப்பலில் பயணித்து இப்படி ஸ்விஸ் வாட்சுகளை 500க்கும் மேற்பட்ட மகாராஜாக்களுக்கு demo காட்ட வேண்டி பயணித்து, பல நாட்கள் காத்திருந்து manual காட்டி விளக்கி விற்றுள்ளது வரலாறு.
இது லிமிடெட் எடிஷன் வாட்ச் ஆகும் ,
42.5 mm case அளவைக் கொண்டது,
50 கிராம் எடையைக் கொண்டது, 2013 ஆம் ஆண்டில் உலகளவில் 500 மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளது, இதை பழைய வாட்ச் சந்தையில் வாட்ச் தரகர்கள் உலகளாவிய வாட்ச் enthusiasts இருக்குமிடம் தேடிப்போய் 10 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து சரோஜாதேவி உபயோகித்த சோப்பு டப்பா ரீதியில் இந்த வாட்சை மீள் விற்பனை செய்கின்றனர்,சில வாட்ச் தரகர்கள் தரையடியாக இறங்கி சதுரங்கவேட்டை திரைப்படத்தில் வரும் உயர்பதவி தரும் கோபுரகலசம் என்ற ரைஸ்புல்லிங் மோசடி போல , இந்த வாட்சை கையில் கட்டினால் முதல் அமைச்சர் ஆகலாம் என்று கூட ஆசை காட்டி விற்கின்றனர் என அறிந்தேன்.
ஆனால் பாருங்கள், இதை தயாரித்து சந்தைப்படுத்தியவர்கள் specification manual ல் குறிப்பிடாத சிறப்பம்சங்கள் இவை,
Bell & Ross என்ற பெருமை மிகு ஸ்விஸ் நாட்டு நிறுவனத்தார் 1992 ஆம் ஆண்டு முதல் கைக்கெடிகாரம் தயாரிக்கின்றனர், ஃப்ரான்சின் முதன்மையான விமான உற்பத்தி நிறுவனமான Rafele நிறுவனத்தாருடன் இவர்கள் இணைந்து இந்த வாட்சை வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளனர்.
Falcon business jet என்ற அதிவேக போர் விமானம் அறிமுகமான 50 ஆம் ஆண்டைக் கொண்டாடும் வண்ணம் இந்த வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடிகாரம் நல்ல கனமானது, அதை தாங்க உறுதியான வசதியான தரமான ரப்பர் பட்டையுடன் வந்துள்ளது,self winding automatic அதாவது கையசைவில் தானே முறுக்கேறிக்
கொள்ளும் வாட்ச் வகை இது.
நல்ல துல்லியமான dial design கொணடது , இது இருட்டில் ஒளிராது, கருப்பு நிறத்தில் போர் வாள் போல பெரிய முள்ளும் குத்துவாள் போல சிறிய முள்ளும், ஆரஞ்சு நிறத்தில் நொடி முட்கள் என அழகாக உள்ளது, சாம்பல் நிற டயலுடன் அழகாக பொருந்திப் போகின்றன.
இதில் tachymeter உண்டு, விளையாட்டுகளில் ஸ்டார்ட் ஸ்டாப் பயன்பாட்டிற்காக
வரையறுத்துக் கொள்ளலாம்,
இதன் குறைந்த உற்பத்தி மற்றும்
4.5 லட்சம் ரூபாய் நிறுவனம் நிர்ணயித்த விற்பனை விலை காரணமாக, ரஃபேல் கடிகாரம் அணிந்த சரியான தகுதியான நபரை இந்தியாவில் கண்டுபிடிப்பது கடினமான பணியாகும்,
இக் கைக்கடிகாரம் ரஃபேல் போர் விமானிகள் அணிவதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும்,
நேரம் பார்க்க எளிதாக இருக்கும் படி அத்தனை தனித்துவமாக வடிவமைத்துள்ளனர்.
Bell & Ross PR 03-94 எந்த கடும் தட்ப வெப்ப சூழ்நிலையில் பிடித்து நின்று இயங்கும் படி வடிவமைக்கப்பட்டது, அதிக தெளிவுத்திறனுக்காக எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உறுதியான உடைந்து நொறுங்காத ceramic case , உறுதியான scratch resistant கண்ணாடி, இதன் டயல் வடிவமைப்பு போர் விமானத்தில் காணப்படும் dashboard meter ,
fuel gauge போலவே உள்ளது,
இந்த Bell & Ross வாட்ச்கள் காக்பிட் தீம், சதுர வடிவ டைம்பீஸ் மற்றும் வட்ட வடிவ Bezel கொண்டு மிகச்சிறப்பாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Ps: ஒரு அவல நகைச்சுவை நீதிக்கதை உண்டு புதுப்பணக்காரன் தங்க மோதிரம் வாங்கிய கதை, காலையில் இருந்து புது மோதிரத்தை யாரும் ஏறெடுத்து பார்த்து பாராட்டாததால் அவன் குடிசைகளை கொளுத்தி தண்ணீர் ஊற்றி அணைப்பது போல பாவலா காட்டுவான், அப்போதும் கூட அந்த மோதிரத்தை ஒவ்வொருவர் முகத்தை நோக்கியும் ஆட்டிக் காட்டுவான், அப்போது தான் ஒரு கிழவி சொல்லும், என்னடா கண்ணையா புது மோதிரமா? என்று ,அவன் அந்த கிழவி தலையில் கொட்டுவான், இதை காலையிலேயே நீ கேட்டிருந்தால் நான் ஏன் குடிசையை கொளுத்தப்போறேன் என்று, இந்த ரஃபேல் வாட்ச் கதையை கேட்டதும் இந்த அவல நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.
#மண்டபம்,#அன்னவெறி_கண்ணையர்கள்