அப்போது தமிழகத்தில் மின்சாரமில்லாத காலகட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற பஞ்சாயத்து கூட்டம், வேட்பு மனு கூட்டம், ஏலம் விடும் கூட்டம் இவை இரவில் பாட்டாளி மக்கள் பணிமுடித்து திரும்பிய உடன் ஆலமர, அரசமரத்தடியில் தான் நடந்திருக்கின்றன.
இதற்கு என்று தலைபாரமாக சுமக்கும் பெரிய பெட்ரோமேக்ஸ் விளக்குகள் இருந்தன, கொசுவை விரட்ட சாம்பராணி,
கூட்டத்தில் தலைமீது எழுது பொருட்கள் ஆவணங்கள் ரப்பர் ஸ்டாம்ப் இவற்றை கொண்ட அலுமினிய பெட்டியை சுமந்த ஒருவர், சாம்பராணி தூபம் மயிலிறகால் விசிறி இடுவதைப் பாருங்கள்,
அழுக்கேறிய கணக்குப்பேரேடு, வேட்புமனு தாக்கல் கையொப்பமிடுகையில் பந்தம் வைத்து வெளிச்சம் தர ஒரு தீவட்டி ஆள் இருந்ததை இணைப்பு படத்தில் பாருங்கள் .
இது சவாலே சமாளி திரைப்படத்தில் வருகிற புளியஞ்சேரி ஊராட்சி மன்றக் காட்சி, இயக்குனர் ஒளிப்பதிவாளர் A.வின்சென்ட் மாஸ்டர் செய்தது, ஒவ்வொரு ஃப்ரேமும் வண்ணமிகு ரம்மியமான பொங்கல் வாழ்த்து அட்டைகளைப் பார்ப்பது போலவே இருக்கும்.
இதே போலவே சத்யம் படத்தின் ஊராட்சி மன்ற கூட்ட காட்சியும் கூட பெட்ரோமேக்ஸ் விளக்கொளியில் அத்தனை ரம்மியமாக இருக்கும்,அதன் ஒளிப்பதிவு K.S.பிரசாத் அவர்கள் (தில்லானா மோகனாம்பாள்) அதில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவாஜிக்கு கையில் வெள்ளிப் பூண் இட்ட கருங்காலி செங்கோல் தந்திருப்பார்கள்,மண்டப சுவற்றில் சார்த்தி வைக்கப்பட்ட கட்டியம் கூட உண்டு , இணைப்பு படங்களில் பாருங்கள்.