Kovur Sundareswarar Temple
மாங்காட்டை அடுத்த கோவூரில் சுந்தரேஸ்வரர் கோவில் மிகப்பழமையானது, தொண்டை மண்டலத்தின் சிவாலயங்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம் (தூங்கானை மாடம்)கொண்ட கோவில் இது, கல்விக்காரகன் புதன் பரிகார ஸ்தலமும் கூட, இரு வாரங்களுக்கு முன் சென்று படங்கள் பகிர்ந்திருந்தேன்,
இதன் ஏழு நிலை ராஜ கோபுரம் புதுமையானது, பால்கனி போன்ற வடிவமைப்பு எல்லா நிலை கோபுர வாசல்களிலும் நான்கு புறங்களிலும் கொண்டு தனித்துவமான கட்டிடக்கலையுடன் விளங்குகிறது,
உள் பிரகார சுவற்றில் கல்வெட்டுக்கள் பல கொண்ட கோவில், ஆனால் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ்பெற்றது போல இது புகழ்பெறவில்லை, ஆனால் இதுவும் இறைசித்தமே,அவன் விரும்பினால் தான் கூட்டம் திரளும்,அவன் அமைதியை வேண்டினால் குடத்தினுள் இட்ட தீபமாக அமைதியாக அருட்பாலிப்பான்.
நேற்று ஃபேஸ்புக்கில் மனிதன் படத்தின் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருக்கையில் பழைய செங்கல்சூளையை விலைக்கு வாங்கி ரகுவரன் நடத்தும் தனியார் சிறை மற்றும் வெடிகுண்டு தொழிற்சாலையை வேவு பார்க்கச் செல்கிறார் ரஜினி ,
இந்த கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் கோபுரத்துக்குள் ஏறி அதன் பால்கனி வழியே பைனாகுலரில் வேவு பார்ப்பதைக் கவனித்தேன்,உடனே இதை பகிர்ந்தேன்,நம் ஆட்களுக்கு வருஷம் 16ல் குஷ்பூ குளித்த குளம் என்றால் நூறு வருடங்களானாலும் மறக்காது, அது போல மனிதன் படத்தில் ரஜினி ஏறிய கோபுரம் இது.
இதற்கு செல்ல நினைப்போர் யாரையும் கேட்காமல் கூகுளில் kovur sundareswarar temple என்று mapsல் தேடி direction அழுத்தி routeஐ start செய்து போய் வாருங்கள், காலை 7-00 முதல் 11வரை, பின்னர். 4-00 முதல் 8-00 வரை இக்கோயில் திறந்திருக்கும்.
சினிமாக்காரர்கள் ஷூட் செய்ய அருமையான லொக்கேஷன் , ராஜகோபுரத்தின் எதிரே மாட வீதி , அசோக மரங்கள் ,சிதிலமுற்ற பழமையான திண்ணை அக்ரகார வீடுகள் உள்ளன.
மனிதன் படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10157852490801340&id=750161339