இன்று இந்த 1000 வடமாநிலத்தவர் பாதிவழியில் இறக்கி விடப்பட்டனர், நாளை பயணிகளிடம் சலசலப்பு எழாவிட்டால் மீண்டும் 3000 வடமாநிலத்தவர் கூட கசகசவென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிப்பர்,பயணிகள் தினம் புகார் செய்து அபாய சங்கிலி பிடித்து இழுத்து இவர்களை கீழே இறக்கிவிட முடியுமா?
கடந்த எட்டு வருடங்களாக இது தொடர்கிறது, வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் பரவலாகாததால் நேர்ந்த விபரீதம் இது , தொலைநோக்கில்லாத தலைவர்கள் தந்த பரிசு இந்த வறுமை.
மூன்று மாதம் முன்பு திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிப்பவர்களை தொந்தரவு செய்து குறுகுறுவென வெறித்து பார்த்தபடி கூல் லிப் , ஹான்ஸ்,குட்கா கைனி வாயில் குதப்பி அடக்கிக் கொண்டு பயணிப்பது தான் இன்றைய ரயில் பயணத்தில் ஃபேஷன்,
எனவே ரயிலில் முன்பதிவு செய்பவர்கள் 2nd ஏசியில் மட்டும் முன்பதிவு செய்யுங்கள், இல்லை என்றால் மந்தை மந்தையாக உங்கள் காலடியில் மக்கள் அமர்ந்து வருவர்,இது நிதர்சனம்.
உங்களால் கழிவறைக்கும் போக முடியாது, அங்கே வைத்து மது குடிப்பர்,வாஷ்பேஸினில் மூத்திரம் போவர், டாய்லெட் கோப்பையை அத்தனை அவலமாக மாற்றியிருப்பர், ஒன் இந்தியா என்ற அகண்ட பாரதத்தின் பெருமைகள் இவை.