இது பொம்மை 1964 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நாம் காணும் Old Trunk Road (GST Road) தொலைவில் தெரிவது பரங்கிமலை.
இன்று ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் அன்று இந்த எச்சரிக்கை பலகை இருந்துள்ளது,
"அபாயம் நில் , வலம் இடம் இரு பக்கங்களிலும் கவனிக்கவும், தாழ்வாக பறக்கும் விமானங்கள் குறுக்கிடலாம்,விமானம் இல்லாவிடில் மட்டும் வாகனத்தில் மேற்கொண்டு செல்லவும்"
என்று கனரக வாகனங்களுக்கு வேண்டி 1964 ஆம் ஆண்டு வரை இங்கே எழுதப்பட்டிருக்கிறது.
இன்று இந்த இடத்தில் ஆலந்தூர் மெட்ரோ உள்ளது,இங்கிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ நோக்கி செல்லும் மெட்ரோ ரயில் பாதையின் மீது இரவில் ஒளிரும் Reflective கூரையை விமானத்தை தரையிரக்கும் விமானிகளை எச்சரிக்க வேண்டி அமைத்துள்ளனர்.
இணைப்பில் இங்கே இன்றைய விமானம் தரையிரங்கும் சூழலையும் படங்களில் பாருங்கள்.
அது பற்றி எழுதிய பதிவு இங்கே
இதே சாலையின் எதிர்புறம் விமானம் தரையிறங்குவதற்கு வேண்டி பரங்கிமலை அடிவாரத்தில் இருக்கும் St.Garrison church ன் அழகிய உயர்ந்த கோபுரம் உயரம் குறைக்கப்பட்ட சுவையான வரலாறும் உண்டு, அது பற்றி எழுதிய பதிவு இங்கே