படத்தில் உள்ளது பில்டர்ஸ் பென்சில் அல்லது கார்பென்டர் பென்சில்,இது தட்டையாக இருக்கும், இதன் பயன் எக்காரணம் கொண்டும் லேத் பட்டறையில் அளவு வைத்து வரைந்து கீழே வைக்கையில் உருண்டு ஓடக்கூடாது என்ற முன் யோசனையால் தான்,அப்படி உருண்டு ஓடினால் அது சில சமயம் பட்டறைக்குள் சென்று சிக்கும், அல்லது காலடியில் விழும், குனிந்து எடுக்கையில் தலையில் மேஜை தட்டும் போன்ற முன் எச்சரிக்கைகளால் தான்.
சர்வதேச அரங்கில் கட்டுமான தளத்தில் வைத்து செய்யப்படும் அனைத்து விதமான வேலைகளுக்கும் இந்த பில்டர்ஸ் பென்சில் அல்லது கார்பென்டர் பென்சில் தான் பயன்படுத்துகின்றனர்,இதற்கென்று பிரத்யேகமான ஷார்ப்னர் கூட இருக்கிறதைப் பாருங்கள், 1990 களின் பிற்பாதியில் கட்டுமான தளங்களில் கார்பென்டர்கள் இந்த வகை பென்சில்களை பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன், இன்று இவ்வகை பென்சில்களை யாரும் உபயோகிப்பதை பார்த்ததில்லை.