இந்திய சினிமாவின் டைம் ட்ராவல் திரைப்படமான அபூர்வ சக்தி 369 என்ற ஆதித்யா 369 1991 ஆம் ஆண்டு வெளியானது,இது ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியானது, இதன் தயாரிப்பாளர் எஸ்பிபி, இசை இளையராஜா,
இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் பல்லாவரம் மலையில் டைம் மெஷீன் செட் வடிவமைத்து கிட்டத்தட்ட மூன்று வாரம் படப்பிடிப்பு நடைபெற்றது,இப்படத்தின் ஆர்ட் டைரக்டர் Peketi Ranga Rao அந்த கண்ணாடி உருளை டைம் மெஷினை பல்லாவரம் மலையின் உச்சியில் இருக்கும் சிதிலமடைந்த மசூதி அருகே உள்ள மேடையில் செட்டாக வடிவமைத்திருந்தார்,
அதைப் பார்க்க அப்படி ஒரு ஜனத்திரள் கூடியது.அதன் முந்தைய வருடம் தான் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மைக்கேல் மதன காமராஜன் எடுத்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருந்தார்.
இதில் வரும் அம்ரீஷ்புரி , பாலகிருஷ்ணா,டின்னு ஆனந்த் காட்சிகளை சிங்கீதம் சீனிவாச ராவ் ஓய்வு ஒழிச்சல் இன்றி இயக்கிக் கொண்டிருந்தார். அப்போதைய பாலகிருஷ்ணா எந்த சேட்டைகளும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார்.சிறுவனாக தருண் நடித்திருந்தார்.இப்படம் கபீர்லால்,v.s.r.swamy மற்றும் P.C.ஸ்ரீராம் என மூவர் ஒளிப்பதிவு செய்த படம்,ஆனால் P.C.ஸ்ரீராம் அவர்களுக்கு rolling credit இல்லை.ஆனால் working stills ல் அவர் இருக்கிறார்.
அப்போது ஏழாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் தொடர்ச்சியாக வகுப்பு கட் அடித்துவிட்டு பல்லாவரம் மலைக்குச் சென்று ஷீட்டிங் பார்த்த நினைவு இன்னும் பசுமையாக உள்ளது, அன்று ஷூட்டிங் பார்த்த பின் 26வருடங்கள் கழித்து இன்று தான் அக்காட்சியை யூட்யூபில் பாரத்தேன்.நல்ல HD ப்ரிண்டில் மீண்டும் பார்க்க வேண்டும்.
பல்லாவரம் மலையில் அப்போது வெளியான படங்களில் ஓரு காட்சியேனும் எடுப்பார்கள், அதே அம்ரீஷ் புரியை அங்கே தளபதி படத்தின் படப்பிடிப்பிலும் பாரத்திருக்கிறேன்.
https://youtu.be/JS-quxjg6jI