நேற்று சத்யம் வளாகத்தில் அடுத்தடுத்து படங்கள் பார்த்தபடி இருந்ததால் மழையின் உக்கிரம் தெரியவில்லை, 6-00 மணிக்கு துவங்க வேண்டிய 3 floors இத்தாலி மொழி திரைப்படம் துவக்க விழா நிகழ்ச்சி முடிந்து 8-00 மணிக்கே துவங்கியது,
என் ஸ்கூட்டரை சரியாக தியேட்டர் முன்பு சாலையில் சென்டர் ஸ்டாண்ட் இட்டு நிறுத்தியிருந்தேன் (சத்யம் வளாக ஏற்பாடு), இந்த உக்கிர மழையில் நாள் முழுக்க நனைந்தும் உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது , ரெயின் கோட் பேண்ட் மனைவி சொல்லியும் கொண்டு வரவில்லை ,வண்டி உள்ளே இருந்த கோட் அதன் hood அணிந்து மேலே ஹெல்மட் அணிந்து மழையில் நனைந்து ஐந்து கிலோ மீட்டர் ஓட்டி வர பேண்ட் முழுக்க நனைந்து , கைகள் நனைந்து குளிர ஆரம்பித்துவிட்டது,
போன வருடம் இப்படி ஒரு மழையில் நனைந்த நண்பன் பாலா கொரோனாவில் விழுந்து இறந்தது நினைவு வர ,பம்மல் செல்வதை தவிர்த்து தி.நகரில் அக்கா வீட்டுக்கு தேவர் சிலை திருப்பத்தில் திரும்பி விட்டேன்,
இரவில் அவர்களை ஹார்ன் அடித்து எழுப்பி கேட்டை திறக்க வைத்து ,பத்து தட்டு தோசை புதினா சட்னி வைத்து சாப்பிட்டு பழம் ,பால் எல்லாம் சாப்பிட்டு இரவு அவர்கள் வீட்டில் சுகமாக தூங்கி காலை ஏழு மணிக்கு எழுந்து வீட்டுக்கு கிளம்பினேன்.
நான் எப்போதும் மவுண்ட் ரோடில் செல்வதை தவிர்ப்பேன், சிக்னல் வாகன நெரிசல் காரணம், நுங்கம்பாக்கம், திநகர்,சைதை, கிண்டி எஸ்டேட் வழியாக ஜி.எஸ்டி தான் என் பதிவான பாதை.
இந்த 2021 ஆம் ஆண்டு முரட்டுப்பயல் ஆனால் மிகவும் நியாயஸ்தன் போல இந்த வருடத்துக்கான மழையை வட்டியும் முதலுமாக கொடுத்து விட்டான்.
இன்று காலை மேட்லி சப்வெ வழியாக செல்ல நினைத்தால் சப்வே முழுக்க நிரம்பி வழிகிறது, கண்ணம்மாபேட்டை வழியே அரங்கநாதன் சப்வே இறங்கி கிண்டி எஸ்டேட் எடுத்து வீடு வந்தேன்.
நேற்று இரவு சென்னை மக்கள் அப்படி அலறியிருக்கின்றனர், எனக்கு மிகவும் நல்ல நாளாக இருந்திருக்கிறது.
#மழை,