யூட்யூபில் ஹிட்ஸ் வாங்கவும் வீட்டுக்காரர்களிடம் இருந்து பெரிய தொகையை ஏமாற்றவும் அயோக்கியர்கள் இது போல 6 லட்சம் ரூபாய் வீடுகளின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தரவேற்றுகின்றனர்.
இது ஒரு நூதன புரட்டு, இது போல தரை ரேட்டிற்கு இறங்கி வீட்டுக்காரர்களிடம் பொய் சொல்லி வேலையெடுத்து உங்கள் பணத்தை பெருமளவு பிடுங்கி வெளியேறி விடுவார்கள்,
அதன் பின் நீங்கள் வேறு மேஸ்திரி தேடி அலைய வேண்டும் 600,000 பட்ஜெட்டாம் ÷900 சதுர அடியாம் = 1 சதுரடிக்கு 666 ரூபாய் ,2020 ஆம் ஆண்டில் எப்படி செய்ய முடியும்?
இன்று கட்டுமானப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதம் அமல்படுத்தப்பட்ட நிலையில் நியாயமாக கட்டுமானம் செய்ய குறைந்தது 1800 ரூபாய் சதுரடிக்கு ஆகும்,
நியாயமாக இது போல ஒரு வீடு காம்பவுண்டு சுவர், செப்டிக் டாங்க்,மேல்நிலை நீர்தொட்டி, சம்ப், எல்லாம் வைத்து கட்டி முடிக்க குறைந்தது 18 லட்சம் ஆகும்,
இவர்கள் உங்கள் பணத்தை பீராய்வதற்கு வேண்டி 6லட்சம் ரூபாய் என அடித்து விடுகிறார்கள்,திருட்டை விட மோசமானது நம்பிக்கை துரோகம்.உங்கள் பொன்னான பணத்தை இழக்காதீர்கள், ஏமாற்றப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.
PS:இந்த கடுமையான விலை உயர்வு . கால கட்டத்தில் சதுரடி 1700 to 1800 க்கு செய்ய வேண்டும். ஆனால் ஒரு சில காண்ட்ராக்டர் , படித்து விட்டு புதியதாக தொழில் செய்யும் பொறியாளர் நண்பர்கள் 1400 க்கு செய்து தருகிறோம் என்று வேலை எடுக்கிறார்கள்.
இன்றைய விலை விபரம் ,
செங்கல் 6 ரூபாய்க்கு விற்றது 8 ரூபாய் , கம்பி 46 ரூபாய்க்கு விற்றது 62 ரூபாய், சிமெண்ட் 390 ரூபாய்க்கு விற்றது 430 ரூபாய், msand ,psand,20mm,40mm ஜல்லி ஒரு unittukku 1000 அதிகம், எலெக்ட்ரிக் கல் , பிளம்பிங் பொருட்கள் 20 சதவீதம் அதிகம், கிரில் கேட் வகைகள் கிலோ 85 ரூபாய்க்கு செய்தது கிலோ 110 ரூபாய், டைல்ஸ் விலை 10 சதவீதம் அதிகம்.
ரூ.420 சிமென்ட் மூட்டையில் 120 ரூபாய் GST வரி ,
40 ரூபா விற்ற கம்பி 80 ரூபாய் GST வரி,
500க்கு விற்ற காயில் 1300 ரூபாய் 500 ரூபாய் பைப் 1200 ரூபாய்
மரம் விலை 10 சதவீதம் அதிகம். Paint விலை 30 சதவீதம் அதிகம். வேலையாட்கள் கூலி சதுரடி 300 இல் இருந்து 400 ஆகி விட்டது. கார்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரிக், டைல்ஸ் ஓட்டுபவர், பெயிண்டர், என அனைத்து வேலை களுக்கும் கூலி 100 ரூபாய் வரை அதிகம். எனவே 1400 , 1500 க்கு வேலை எடுத்து செய்ய நினைக்கும் நண்பர்கள் , கவனமாக இருக்கவும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#நூதன_மோசடி,#நூதன_ஜேப்படி,#சதுரடி_666_ரூபாய்,#900_சதுரடி_வீடு_6லட்சம்_ரூபாய்,#லங்கர்_கட்டை,#லங்கர்_உருட்டு