இன்று lamy ink flipcart மூலம் கைக்கு கிடைத்தது, பேனா என்றால் லேமி என்பார்கள், அதனால் lamy பேனா மற்றும் இங்க் சற்று விலை அதிகம்,
30 ml 715₹ , lamy பேனா எழுதுவது அத்தனை லயமாக இருக்கும், மாவு போல எழுதும், thick ஆக எழுதும்.
இதன் மை கூட்டின் patent pending product design அபாரமானது,பேனா மை நிரப்ப வேண்டி இங்க் பாட்டிலை சாய்க்க வேண்டாதபடிக்கு இதில் ஸ்படிக லிங்கம் போன்ற ஒரு ink pit தந்துள்ளனர், அதில் சென்று nib அமரும், அழகாக ஒரே திருகில் cardrige முழுக்க நிரம்பும்.
துபாயில் இருந்து நான் கடைசியாக காலி செய்து வருகையில் எடை கூடி விட்டதால் நிறைய கழித்து கட்டி வந்ததில் இந்த மனம் கவர்ந்த மைபுட்டி கைவிட்டுப் போனது.
இந்தியாவில் கிடைக்கும் எதுவும் பேஸிக் வெர்ஷன் என்பார்கள், அதை சும்மா சொல்லவில்லை, உணர்ந்து சொன்னது,
இதில் உள்ள tissue holder ஐ இந்திய வாடிக்கையாளருக்கு வேண்டி கழித்துகட்டி தயாரித்தவர்களின் லட்சணம் பாருங்கள், இது ஒரு சோற்றுப் பதம்.
பேனா நிரப்பிய பின் nibல் வடியும் மையை துடைக்க இப்படி tissue holder உடன் தயாரிக்க வேண்டியதை இப்படி cost cutting செய்துள்ளதைப் பாருங்கள,
இணைப்பில் நான்காம் படத்தில் உள்ளது international version நான் துபாயில் உபயோகித்தது, இரண்டாம் படத்தில் உள்ளது indianised version.
இந்தியர்களுக்கு compromise in quality என்பது பழகிப்போனதால் இது எல்லாவற்றிலும் நடக்கும்,இங்கே American tourister, Jansport backback, Rayban coolers, Jack daniels scotch என எது வாங்கினாலும் அப்படி முன்னே பின்னே தான் இருக்கும்.
இங்கே ஜெர்மனியில் இருந்து Lamy ஐ பெருமையுடன் இறக்குமதி செய்து அரைகுறையாக சந்தைப்படுத்துபவர்கள்
FCE Lifestyles Pvt. Ltd.,
N-40, Connaught Place, New Delhi-110001
Care: +919323068315
E-mail: repairs@lamyshop.in