உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு தரமான natural bamboo blinds (மூங்கில் திரைசீலை ) அமைப்பது தனித்துவமான அழகைத் தரும், வெளிப்புற சூடு காற்றை வடிகட்டி அறைக்குள் அனுப்பும், மேற்கு ,தெற்கு பார்த்த ஜன்னல்களுக்கு கண்டிப்பாக மிகுந்த பயனளிக்கும், sun breakers போல செயல்பட்டு புற ஊதா கதிர்களை வடிகட்டி உள்ளே அனுப்பி அறைக்குள் 5% சதம் சூட்டை குறைக்கும்,வெளிப்புற தூசுகள் நேரடியாக அறைக்குள் வராமல் இவை காக்கும்.
மூங்கில் திரைச்சீலை அமைக்க எண்ணுபவர்கள் உங்கள் அருகே உள்ள மூங்கில் கைவினை கலைஞர்களை அணுகுங்கள் ,எனக்கு இரண்டு ஜன்னல்களுக்கு (3'x4',4'x4') இன்று மாட்டித் தந்து விட்டுச் சென்றார் ஒரு கைவினை கலைஞர்,
சதுர அடிக்கு 58₹ ஆனது, இரண்டு ஜன்னலிற்கும் சேர்த்து 1400 ₹ ஆனது, வண்டிக்கூலி பொருத்துதல் உட்பட, இதில் pulley teflon கயிறு ,ss வளையம் , மேலும் கீழும் ரீப்பர் கட்டை ,தையல், side ல் கலிக்கோ துணி, மாஞ்சா நூல் தையல் எல்லாம் தரமாக இருந்தது,
திருவல்லிக்கேணி அடையாரில் சாலையோரத்தில் நிறைய மூங்கில் மூங்கில் கைவினை கலைஞர்களை கண்டறியலாம்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#bamboo_blinds,#மூங்கில்_திரைச்சீலை