சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் டிஸ்கோ ராஜா தெலுங்குப் படத்திற்கு இசைஞானியின் அறிவுரையின் படி அந்தக் காலத்தைய 1980 களின் இசையை உருவாக்கியிருந்தார்,அதில் SPB அவர்களின் குரல் முக்கிய அடையாளம்,பின்னர் Bass கிடாரின் முக்கியத்துவத்தை ஒருவர் நன்கு உணரலாம்,அதற்காகவே இந்த சத்யா படத்தின் வலையோசை கலகல பாடலின் bass guitar cover ஐ தேடிச் சேர்ந்துள்ளேன்,இரண்டையும் கேளுங்கள்.
இப்படி பழைய காலகட்டத்துக்கு அப்போது வந்த திரைப்பட பாடல்களின் இசையை பயன்படுத்தாமல் புதிதாக உருவாக்குவது நல்லது, இது மிகுந்த ஆரோக்கியமான போக்கு, இதன் மூலம் தந்திக் கருவிகள் ,தோல்வாத்தியங்கள் , காற்று வாத்தியங்கள் அதை வாசிக்கும் கலைஞர்கள் என மீண்டும் ஸ்டுடியோக்கள் புதுவாழ்வு பெறும், சிந்தஸைசர் கொண்டு இசையை உருவாக்கும் போக்கு குறையும்,
முன்பெல்லாம் கேசட்டில் மண்டை ஓடு படம் வரைந்து piracy is killing music என அச்சாகியிருக்கும், இன்றைய இசையமைப்பாளர்கள் மென்பொருளைக் கொண்டு இசையமைப்பதும் இசையைக் கொல்வது போலத் தான்.
#retro_music,#bass_guitar,#disco_raja,#இசைஞானி,#தமன்