Khilona இந்தி 1970 ஆம் ஆண்டு L.V.பிரசாத் அவர்கள் தயாரிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது, எங்கிருந்தோ வந்தாள் 1970 ஆம் ஆண்டு நடிகர் பாலாஜி தயாரிப்பில் அக்டோபர் மாதம் சுடசுட வெளியாகி உள்ளது, டைட்டில் கார்ட் துவங்கி கலை அலங்காரம் வரை அங்குலம் அங்குலமாக அப்படியே Khilona வில் இருந்து வரித்துக் கொண்டனர் தமிழ்படகுழு,காரணம் பிதாமகர் L.V. பிரசாத் ரசனையை விட என்ன சிறப்பாக தமிழில் செய்து விட முடியும் என்று,நடிப்பிலும் இசையிலும் மட்டுமே உண்டு வித்தியாசம்.
பிரசாத் மற்றும் சாரதா ஸ்டுடியோவில் கிலோனா படப்பிடிப்பு முடிந்து குழு வெளியேறியவுடன் தமிழ் படக்குழு உள்ளே நுழைந்து எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுத்துள்ளனர், சின்ன கல்லு பெரிய லாபம் என்னும் டெக்னிக்.
நாயகி ஜெயலலிதாவுக்கு சிறு குழந்தையாக இருக்கையில் ரயில் விபத்து நடந்து ,அவரை ஒரு நாட்டிய மகளிர் பெண்மணி எடுத்து வளர்ப்பார், அந்த ரயில் விபத்து செலவில்லாத புகைப்பட montage technic தான், அக் காட்சிகளைக் கூட அப்படியே கிலோனா raw footages ஐ எங்கிருந்தோ வந்தாளில் பயன்படுத்தி உள்ளனர்.