ஓவியர் மனோகர் தேவதாஸ் (83) அவர்கள் இன்று மறைந்து விட்டார்.
காட்சித்திறன் சவால் மிகுந்த வாழ்க்கையிலும் தன் வாழ்நாளை ஓவியத்துக்கு என்றே அற்பணித்தவர், உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ பெற்றவர்.
indian ink dot shiography rendering என்ற பாணியில் நெருக்கமான பல லட்சம் புள்ளிகளால் அவர் மனதில் பசுமையாக பதிந்திருந்த மதுரை நகரை உயிரோட்டமிகுந்த ஓவியங்களாக வரைந்து
Multiple faucets of my Madurai என்ற தரமிகு புத்தகம் வெளியிட்டிருந்தார், மேகம்,நீர்நிலை, மக்கள் கூட்டம்,மரங்கள், மிதிவண்டி, கோயில் கோபுரம், தையல் எந்திரம், திருவிழா, திரையரங்கம் என கருப்பு வெள்ளை புள்ளிகளில் அத்தனை லயம், உயிரோட்டம் கொண்டு வந்தவர்.
அவர் மனைவி மஹிமா அவர்கள் ஓவியருக்கு அத்தனை துணையாக இருந்தார்.
ஓவியர் மனோகர் தேவதாஸ் ஐயாவுக்கு இதய அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்