கையில் பணம் குறைவாக வைத்துக் கொண்டு பட்ஜெட் பார்த்து வீடு கட்டுபவர்கள் , உங்கள் கார் பார்க்கிங் , பைக் பார்க்கிங் வரான்டாவுக்கு கூரையாக RCC ஸ்லாப் அமைப்பதற்கு பதிலாக இப்படி சீமை ஓட்டு கூரை (மங்களூர் டைல்ஸ் ) அமைத்துக் கொள்ளுங்கள், அது வெகுவாக உங்களுக்கு பணத்தை மிச்சம் செய்து தரும்,
இதற்கு வேய்வதற்கு தற்போது நல்ல தரமான L- angle sections, box sections கொண்டு ஃபேப்ரிகேட்டர்கள் கூரை இரண்டே நாளில் அமைத்து விடுவர்.ஒரு தரமான மங்களூர் ஓடு 35 ₹ -45₹ வரும், Rustic Look வேண்டுபவர்கள் பழைய ஓடுகளையும் வாங்கலாம் அது 20₹ க்குள் கிடைக்கும் , ஒரு மங்களூர் ஓடு 10" x16" அளவைக் கொண்டது, ~1.10 சதுர அடி வரும்,
ஸ்டீல் ஃபேப்ரிகேஷன் ஒரு சதுர அடிக்கு 125₹ முதல் 135₹ வரை வரும் ,மொத்தத்தில் 225₹ ரூபாய்க்கு அழகிய உறுதியான மேற்கூரை வேய்ந்து விட முடியும், தரமாக இருக்கும்,காலம் கடந்து நிற்கும், இங்கே இணைப்பு படத்தில் நான் தம்ம சேதுவில் கண்ட சீமை ஒட்டு கூரை படம் பாருங்கள், இது எளிய மெல்லிய 1" x1" L- angle rafters , 2" x2" L- angle purlins கொண்டு வேயப்பட்டுள்ளது இருபது வருடங்களைக் கடந்தும் உறுதியாக உள்ளது.ஓடு வயதாக வயதாக தரும் Rustic Look அபாரமான அழகு பொருந்தியது.
PS:விலை குறைவு என்பதற்காக உங்கள் வீட்டுக்கு ப்ளாஸ்டிக் ஷீட் கூரை, பாலிகார்போனைட் கூரை,அலுமினிய ஷீட் கூரை,ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை, வேயாதீர்கள் ,பார்க்க அசிங்கமாக இருக்கும்,அதனுள் வசிப்போர்க்கும் கேடு விளைவிக்கும்,காலப் போக்கில் இன்னும் உரு குலைந்து விடும், prestige and elegant look ஒருக்கிலும் கிடைக்காது.
மங்களூர் ஓட்டில் சூடு இறங்காமல் தடுப்பதற்கு அடியில் flower tiles வேயலாம், அது அறைக்குள் சூட்டை குறைக்கும்,பார்க்க இணைப்பு படம்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#சீமை_ஓடு,#ரயில்_ஓடு,#மங்களூர்_ஓடு,#mangalore_tiles