திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வருடத்திற்கு ஐந்து நாட்கள் மீசை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம், அந்த கருவறை ஓவியம் இங்கே பாருங்கள்.
எப்போதும் மீசையோடும், கவசம், இடை வாள், உடை வாள், பட்டு பீதாம்பரங்களுடனும் தரிசனம் தரும் பார்த்தசாரதிப் பெருமாள், வருடத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மீசை இன்றிக் காட்சி கொடுப்பார்.
கார்த்திகை தீபத்திருநாள் முடிந்து அன்றைய இரவு முதல் மூலவருக்கு சாம்பிராணி தைலம் சார்த்தி , எகாந்தமாக குளிரச் செய்வர்.
பகல் பத்து ஐந்தாம் நாள் முதல் திருவல்லிக்கேணி பாசுர தொடக்கம் (திருமொழி). அன்று மாலை மூலவர் திரை திறக்கப்படும்.
அன்றுமுதல் பகல் பத்து சாற்றுமுறை முடியும் வரை பெருமாள் மீசை இல்லாமல் மிகவும் எளிமையாக சாந்தமாகக் குழந்தை போன்று காட்சி தருவார்.
வைகுண்ட ஏகாதசி தினம் முதல் சாரதிக்கான அனைத்து அங்க லட்சணங்களுடன் கவசம், இடை வாள், உடை வாள், மீசை, பட்டு பீதாம்பரங்களுடன் மீண்டும் வருடம் முழுவதும் காட்சியளிப்பார் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'பகல் பத்து' அல்லது 'திருமொழித் திருநாள்' எனவும் வைகுண்ட ஏகாதசியை அடுத்த பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'இராப் பத்து' அல்லது 'திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கபப்டுகிறது.
இந்த 2023 ஆம் வருடம் மீசையில்லாத தரிசனம் முடிந்து விட்டது,2024 ஆம் ஆண்டு ஜனவரி நினைவில் வைத்திருந்து தரிசனம் செய்வோம்.