படத்தில் இருப்பது சென்னை பல்கலைகழகத்தின் செனேட் ஹவுஸ் முகப்பில் இன்றும் வீற்றிருக்கும் விக்டோரியா மகாராணியின் முழு உருவச்சிலை.
இத்தாலிய சிற்பி Mario ragi (1821-1907) வடிவமைத்து பிரம்மாண்ட மெழுகு அச்சிற்குள் வெங்கலம் உருக்கி வார்த்த சிலை இது.
ஹென்றி யங் & கோ நிறுவனம் மூலம் லண்டனில் தயாரான சிலையில் , பித்தளை 85.6%, தகரம் 7.4%, மற்றும் துத்தநாகம் 4.7%, துத்தநாகம் 2.2% சதமும் கலந்துள்ளது.
அன்று ப்ரிட்டீஷ் இந்தியா முழுதும் 1887 ஆம் ஆண்டு துவங்கி 1890 ஆம் ஆண்டு வரை நிறுவப்பட்ட விக்டோரியா மகாராணி சிலைகள் மொத்தம் 50 என்றால் நம்ப முடியாது,
அன்றே லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து வைத்த சிலைகள் அவை, விக்டோரியா மகாராணி பதவியேற்று ஐம்பது ஆண்டுகள் ஆனதை குறிக்க நாடெங்கிலும் வைக்கப்பட்டவை, 500 க்கும் மேற்பட்ட சமஸ்தான மன்னர்கள் இந்த சிலை வைக்க உபயம் செய்ய நான் நீ என தயாராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மன்னர்களுக்கு மட்டும் இந்த உபயதாரர் சேவை தரப்பட்டது.
இச்சிலைகளில் உடைகளில் உள்ள மடிப்புகள் மற்றும் ஆடையில் உள்ள textures அனைத்தும் அலாதியானவை,தத்ரூபமானவை.
ப்ரிட்டீஷ் ஏகாதிபத்யம் எங்கெல்லாம் பரந்து விரிந்திருந்ததோ அங்கெல்லாம் 1887 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட சிலைகள் இவை.
இணைப்பு படங்களில் ஹாங்காங்கில் வீற்றிருக்கும் விக்டோரிய மகாராணி சிலைக்கு நடந்த conservation project ன் ஆவண presentation படங்கள், ஒவ்வொன்றாகப் பாருங்கள்.
இந்த சென்னை விக்டோரிய மகாராணியின் சிலை பீடத்தில் உள்ள உபயதாரர் குறிப்பு இது.
"statue erected in token of his loyalty, respect and admiration of many virtues faithful subject – Goday Naraen Gujputee Rao of Vizagapatam’ Sir Goday Narayana Gajapathi Rao KCIE (1828 - 1903) "
சர் கோதய நாராயண கஜபதி ராவ் 1868 முதல் 1884 வரை மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றிய இந்திய குறுநிலமன்னர் மற்றும் அரசியல்வாதியாவார். அனகப்பள்ளி ஜமீன்தார்களின் குடும்பத்தில் பிறந்த இவர், பல கல்வி நிறுவனங்களின் நிறுவனராவார்.
Madras University ல் இளங்கலை , முதுகலை வரலாறு படிப்பவர்கள், பட்டமளிப்பு விழா அல்லது வருடாந்திர பயிற்சி வகுப்புகளுக்கு இங்கே செல்லும் தொலைதூரகல்வி மாணவர்கள் அடுத்த முறை இந்த சிலையை ஒரு எட்டு பார்த்து விட்டு வாருங்கள்,கண்டிப்பாக சென்னை வரலாறு மீது உங்களுக்கு காதல் வரும்.