1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 -19 நடந்த கோவா, டையு, டாமன் பிரதேசங்கள் இணைப்பு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு Annexation of Goa என தேடிப் படித்துப் பாருங்கள், பல சுவையான தகவல்கள் கிடைக்கும்.
மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்னும் கதையாக 1947ல்இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் கோவா போர்சுகீசிய காலனி ஆதிக்கத்தில் 1961 வரை இருந்து வந்தது,
அங்கும் ஸ்பானிய வந்தேறிகளை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வந்தது, இந்தியா போர்ச்சுகல் அரசை இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறுமாறு பல முறை 14 வருடங்களில் கடிதங்கள் வாயிலாகவும் , ஐக்கிய நாடுகள் சபை மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தது,
1950ல் சர்தார் பட்டேல் அவர்கள் மறைந்ததால் எப்போதோ நடந்திருக்க வேண்டிய இந்த கோவா இணைப்பு நீண்ட கால தாமதமாகியது.
ராஜேந்திர பிரசாத், நேரு தலைமை தந்த கடைசி எச்சரிக்கையையும் கோவா அலட்சியம் செய்ததால் , ஒரே நாள் போரில் கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது,
இதில் 4600 போர்ச்சுகீசிய ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர், இந்திய ராணுவம் 45000 பேர், நம் ஆயுத பலமோ ஒப்பிட முடியாத படிக்கு இருந்தது, கொசு அடிப்பது போல ஒரே இரவில் போர்த்துகீசியர்களை சுருட்டி விட்டோம், 4600 போர் கைதிகளை சிறை பிடித்து மன்னிப்பும் தந்து போர்ச்சுகலுக்கு திருப்பி அனுப்பினோம், நம் ராணுவ வீரர்கள் 22 பேரும், போர்த்துகீசிய விரர்கள் 30 பேரும் பலியாயினர்.
"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!!
இந்த போர் மட்டும் செய்து கோவாவை இணைக்காமல் விட்டிருந்தால் நமக்கு சீனா, பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், மியான்மார், இலங்கை போன்ற அண்டை நாடுகள் தரும் அச்சுருத்தல் போதாதென்று இவர்களும் தொல்லை தந்து கொண்டிருப்பார்கள், கோவா எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் கேரள , கர்நாடக, மஹாராஷ்டிர மீனவர்களை இவர்கள் சுட்டுக் கொன்றும் இருந்திருப்பார்கள், நம்மை ஆளும் மத்திய அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும், நம் பாட்டன்கள் தேசத்துக்கு சேர்த்த சொத்து கோவா இணைப்பு.