விருமாண்டி திரைப்படத்தில் விருமாண்டி அன்னலட்சுமியிடம்
flirt செய்யும் காட்சியில் வரும் சின்னக்கோளார்பட்டியின் ஆளில்லா ரயில்வே கிராஸிங் மிக அழகிய ஒன்று.
நாளுக்கு ஒற்றை மெயில் போகிற லெவல் க்ராஸிங், அந்த கருவேலங்காடுகள் சூழ்ந்த ஊர் வெளியுலகுடன் ஒப்பிடுகையில் எத்தனை பின்தங்கியுள்ளது என்பதை நமக்கு நன்கு உணர்த்துகிறது.
இது ஒரு செட் என்றால் நம்ப முடியாது, இது இன்றைய மணப்பாக்கம் DLF IT park இருக்கும் நிலத்தில் இருந்த சிவாஜி தோட்டத்தில் கலை இயக்குனர் பிரபாகரால் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட செட் இது.
ஹேராம் திரைப்படத்தில் சாகேத்ராமும் லால்வானியும் சந்தித்துக் கொள்ளும் ஆளுள்ள ரயில்வே கேட் பிரத்யேகமான ஒன்று,
கலை இயக்குனர் சாபு சிரில் பெரம்பூர் பின்னி மில்லில் அதை வடிவமைத்து நிர்மானித்ததை அடுத்து அதே போன்றே ஒரு தத்ரூபமான ஆனால் ஆளில்லாத ரயில்வே கேட்டை நிர்மானிக்க முடிவு செய்து விருமாண்டியில் செயல் வடிவம் தந்தனர்,இந்த விஷயத்தை சமீபத்தில் Virumandi - A walk down with the memory lane பேட்டியில் பகிர்ந்தார்,
இதே கருவேலங்காட்டில் பாக்ஸர் ட்ராயருடன் இருக்கும் விருமாண்டி தன் குழாய் ட்ரவுசரை கையில் கூடவே கொண்டு போய் அணிந்தபடியே அன்னலட்சுமியின் டிவிஎஸ் 50 ஐ தொடர்ந்து பேசிய படி செல்வார்,
இது விருமாண்டி மற்றும் சகாக்கள் உலாத்தும் பீக்காடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தனை பின் தங்கியுள்ள ஊர் சின்னக்கோளார்பட்டி,
பின்னாளில் வீட்டில் எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகையில் அன்னலட்சுமி விருமாண்டியிடம் எரிந்து விழுந்து கைகழுவ விரட்டுகையில் பேசும் வசனம் உண்டு.
"அய்யிய்ய பீக்காட்டுல திரிஞ்சிட்டு நேரா திங்க வந்துருவியாக்கும், எந்திரி கைகழுவு "
கைகழுவச் சென்ற விருமாண்டி தன் பெரிய கருப்புக்கல் மோதிரத்தை அவிழ்த்து பல் வரிசைகளுக்கு நடுவில் ஸ்டைலாக கடித்த படி கைகழுவுவார்.
ஹேராம் ரயில்வே கேட்
#விருமாண்டி,#கன்னியும்_காளையும்,#சொரிமுத்து,#டிவிஎஸ்_50,#ரயில்வே_க்ராஸிங்,#ரயில்வே_கேட்,#சின்னக்கோளார்பட்டி,#சிவாஜி_தோட்டம்,#சிவாஜி_கார்டன்,
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்