சிறுவனாக இருக்கையில் என் மனதில் BJP இப்படித் தான் பதிந்தது
1991 அப்போது எங்கள் அரசுப்பள்ளியில் BJP என்றால் பயங்கர ஜொள்ளு பார்ட்டி என்று பெயர்,எனவே தாவணி அணிந்த மாணவிகளிடம் வழியும் ஆசிரியர்களின் பெயர் BJP
அப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கல் கொடுங்கள் என்ற A4 ஸ்டிக்கரை இந்துக்கள் வீட்டின் நிலைக்கதவில் ஒட்ட கரசேவகர்கள் வீடு வீடாக வந்தனர்,என் அம்மா தீவிர ஆத்திகவாதி , ராமபக்தை, வருடத்துக்கு லட்ச அட்சரம் ஸ்ரீராமஜயம் எழுதியவர்,இருந்தாலும் அவர் மனதில் மததுவேஷம் இருந்ததில்லை, அதனால் அந்த ஸ்டிக்கரை ஒட்டவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்.பொருளுதவியும் தரவில்லை, நான் என் அம்மா வளர்ப்பு ஆதலால் அதை இன்றும் பின்பற்றுகிறேன்.என் அம்மாவுக்கு இந்த rationalist ,centre left சிந்தனை என் அப்பாவிடம் இருந்து வந்திருக்கிறது,என் அப்பா வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு பாலமுருகன் அழகு மற்றும் அருளின் மீதான பற்றினால் கார்த்திக்கேயன் என பெயரிட்டார், அப்போது அது எல்லாம் பெரிய விஷயம்,என் அப்பா பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் திருநீர்மலை ரங்கநாதர் கோவில் இரண்டிற்கும் சரிசமமாக செய்வார்.
அப்போதைய 90 களில் கரசேவகர்கள் இது போல இந்துத்வா சாய்வு உள்ளவர்களின் வீட்டு மொட்டை மாடியில் music band ற்காக சிறுவர் இசைக்குழுவை உருவாக்கி பயிற்சி தந்தனர், அப்போது என் அம்மா இலவச புல்லாங்குழல் வகுப்பு என சேர்த்து விட்டார், அதில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி, இசையுடன் சேர்ந்து மாற்று மதத்தவர் மீதான வெறுப்பு அங்கே சொல்லிக் கொடுப்பார் கரசேவகர்,அதன் காரணமாக நான் அதை நீங்கி வந்தேன்.
பின்னர் முரட்டு இந்து சிறுவர்களை தேர்வு செய்து பல்லாவரத்தின் சேரியில் இந்துத்வா போதனை பயிற்சி தரப்பட்டது, அதனிடையிலும் இளைஞர்கள் இப்படி இந்துக்களுடன் மட்டும் சேர வேண்டும் என்பது போல அங்கேயும் சொல்லிக் கொடுப்பார் கரசேவகர் , தவிர தெருவில் அடி தடிச் சண்டைகளில் பங்கேற்று போலீஸ் வழக்கில் சிக்கும் இளைஞர்களுக்கு இவர்களின் உதவிக்கரம் நீளும்.
இவற்றை எல்லாம் நான் விலகி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளேன்.
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா! என்ற அன்பே சிவம் வரிகள் நிதர்சனமானது,
அதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன், அதனால் எனக்கு வாட்ஸப் பல்கலையில் இருந்து எத்தனை மத துவேஷ பதிவு வந்தாலும் அதைப் பார்ப்பதில்லை,
இன்றைய தினம் என் பால்ய நண்பர்கள் உறவுகள் ரத்த பந்தம் என எல்லோரும் extremist களாக மாறிவிட்டனர், நான் எப்போதும் மாற மாட்டேன்.உலகில் எல்லா சிந்தனைகளுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் என நினைக்கிறேன்.
ஆதார சுட்டிகள்
#மத_துவேஷம்,#நடுநிலை_நக்கி