சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பாதங்களை பராமரிக்க தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கியே தீர வேண்டும்.
வெறும் காலுடன் நடக்கவே கூடாது.
சிறு கால் ஆணி கூட முற்றினால் காலையே இழக்க வைக்கும், எனவே காலை இழப்பதை விட பாத பராமரிப்புக்கு தினம் பத்து நிமிடம் ஒதுக்குவது நல்லது, வீட்டில் பெற்றோர் நீரழிவு நோயாளிகள் என்றால் பிள்ளைகள் கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்,
வெறுங்காலில் நடந்து காலில் புண் வந்து முற்றி சீழ் கோர்த்து புழு வந்தபின் தரும் சிகிச்சை மிகவும் வலிமிகுந்ததாகும்,உடன் மன வருத்தம் தரக்கூடியதாகும், இங்கே சிறப்பு மருத்துவரின் பதிவையும் காணொளியையும் பாருங்கள், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளை மாதம் ஒரு முறை தகுந்த நீரழிவு மருத்துவரை நாடி கட்டுக்குள் வைக்கவும்.