PVR anupam மல்டிப்ளக்ஸ் புது டெல்லியில் உள்ளது,இது இந்தியாவின் முதல் மல்டிப்ளக்ஸ், இந்த மல்டிப்ளக்ஸ் 1997 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது,
ஆளவந்தான் திரைப்படம் அபய் என்று இந்தியிலும் ஒரே சமயத்தில் உருவானது , இந்த PVR anupam மல்டிப்ளக்ஸ் படத்தில் நந்து போதை ஊசி போட்டபின் ஒரு mall ற்குள் கடைகளுக்கு நடுவே செல்கையில் வருகிறது, நம் சென்னையில் 2003ஆம் ஆண்டில் தான் இங்கே சத்யம் மல்டிப்ளக்ஸ் முழுவீச்சில் துவங்கப்பட்டது,
இங்கே நந்து முதலில் McDonalds ஐ பார்க்கிறான், அந்த சிப்பந்தி ஜோக்கர் வேடமிட்டவன் நந்துவிடம் மணி என்ன ஆச்சு என்பான், நந்து மணிக்கு என்ன ஆச்சு என்பான், அவன் கடிகார கடையை காட்டுவான்,பின்னணியில் ஆஷிர்வாத் என்ற பழைய திரைப்படத்தில் அசோக்குமார் அவர்கள் பாடிய ரெய்லு காடி பாடல் ஓடுகிறது,மகிழ்ச்சி அடைகிறான் நந்து, ஒரு கண் கண்ணாடி கடையின் சிப்பந்தி நந்துவுக்கு ஒரு Louvre கண்ணாடி அணிவிப்பார், அதன் பின்னர் நந்து டிவியில் திரையில் பார்ப்பவை அனைத்தும் 3D ஆகவே தெரியும், mall க்கள் படகு போகும், ஒரு zombie நந்துவை டிவியில் இருந்து குதித்து தோளில் அமரும் ,திரைப்படம் ஓடும் மல்டிப்ளக்ஸ் நோக்கி நடக்கச் சொல்லி அழைக்கும்.
மல்டி மீடியா ப்ளேயர் திரையில் சார்லி சாப்ளினின் the circus படத்தின் டீசர் ஓடும், அதில் சார்லி சாப்ளின் தெருவில் தந்தை தோளில் இருக்கும் ஒரு குழந்தை கையில் ஏந்திய ஜஸ்க்ரீமை சுவைத்து விடுவார்,அதன் நீட்சியாக இங்கும் நிஜத்தில்,
நந்து ஒரு கணம் குழந்தையாக மாறி சாக்லேட் ஜஸ்க்ரீம் கோன் ஏந்திய குழந்தையின் ஜஸ்க்ரீமை சுவைத்து விடுவான், அதைப் பார்த்து வழிப்போக்கர் மயில்சாமி நந்துவை அசிங்கமாக திட்டுவார்.
எனக்கு ஒண்ணும் புரியலை என்பார் நந்து, இரு சப் டைட்டில் போடறேன் என்பார் மயில் சாமி, வயிற்றில் வேசி பெத்த மகனே என சப் டைட்டில் ஓடும், மயில் சாமியை முகத்தில் குத்தி சாய்ப்பான் நந்து,
அங்கே கச முச ஆகும், லாபியில் பெரிய மல்டிமீடியா திரையில் ஸ்டார் டிவி செய்தி வாசிக்கும் ரவிணா டாண்டன் நந்து காணாமல் போன செய்தி வாசிப்பார், அவர் முகம் சித்தியாக மாறி கிடு கிட்வானி வேசி பெத்த மகனே என்கிட்டேந்து எப்படிடா தப்பிப்பே என்பார்.
மல்டி மீடியா ப்ளேயர் திரையில் தோன்றுகிற ஒரு Ladyhawke என்ற் ஹாலிவுட் பட விளம்பரத்தில் கருப்புடை நாயகி Michelle Pfeiffer
நந்துவுக்கு வில்லி தன் சித்தி கிடு கிட்வானியாக போல தோன்ற கிடு கிட்வானிக்கு Ladyhawke போல கருப்பு உடை அணிவித்து பெல்டால் நந்துவை அடிக்க விரட்டுவதைப் பாருங்கள், இந்த பெல்ட் தான் நந்து மனதில் நீங்காத ஒரு வடுவாகவே இருக்கிறது, அவனை அப்படி போகுமிடமெல்லாம் துரத்துகிறது,
மாலில் நுழையும் முன் இசைநிகழ்ச்சி போஸ்டரில் பார்த்த அழகிய பாடகி மனீஷா கொய்ராலாவுடன் நந்து theme music ற்கு நடனமாடியிருப்பான், மனீஷா கொய்ராலா மரணத்துக்கும் அவர் இடுப்பில் இருந்து உருவிய பெல்டே காரணமாகிறது,
ஒரு மன நோயாளியின் நுட்பமான மன நிலையை இந்த நீண்ட காட்சியாக எழுதி அனிமேஷன் செய்திருந்தார் கமல்ஹாசன், இவை அனைத்தையும் 80 ன் துவக்கத்தில் தாயம் என்ற க்ரைம் கதையாக சாவி இதழில் எழுதி ஒத்திகை பார்த்துவிட்டார் ஆனால் கைகூடியது 2001 ஆம் ஆண்டில் தான்.
இப்படத்தை 2051 ஆம் ஆண்டிற்கு கூட fresh ஆக அத்தனை detail வைத்து படமாக்கியுள்ளார், அப்போது கூட யாராவது பார்த்து சிலாகித்து பாராட்டுவார்கள்,ஆராய்ச்சி செய்வார்கள்.
1971 ஆம் ஆண்டு Stanley Kubrick இயக்கத்தில் வெளியான clockwork orange திரைப்படம் ஐம்பது வருடங்கள் ஆன நிலையில் இன்றும் இணையத்தில் விவாதிக்கப்படுகிறது, அதிசயிக்கப்படுகிறது, அது போல ஆளவந்தான் திரைப்படத்துக்கும் நடக்கும்.
#கமல்ஹாசன்,#ஆளவந்தான்