அடித்தாலும் பிடித்தாலும் ஆயிரம் ஊழல்கள் நடந்தாலும்,சமூக விரோதச் செயல்கள் அதிகரித்தாலும்,அரசே பல அநியாயங்களை சட்டம் ஒழுங்கின் போர்வையில் கட்டவிழ்த்து விட்டாலும் நம் நாடு இந்தியா நிகரற்றது, எந்நாட்டுடனும் ஒப்பிட்டாலும் இங்கு விலை வாசி, வாழ்க்கைத் தரம் செரிவாகவே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?,
உங்களுக்கு இன்னும் ஐயமிருந்தால் http://www.numbeo.com/cost-of-living/comparison.jsp இந்த தளத்தில் சென்று எந்த நாட்டோடும் ஒப்பிட்டு சோதித்துக் கொள்ளுங்கள், காபி,தேநீர்,உணவகத்தில் உணவு விலை, தண்ணீர் , எரிபொருள்,வாடகை, அரிசி, கோதுமை, பால்,முட்டை, இறைச்சி, மீன்கள், மின்கட்டணம், பேருந்து,ரயில் கட்டணம்,மருந்துகள் ,உடைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,எரிபொருள் விலை மட்டும் அண்டை நாடான பாகிஸ்தான்,பங்களாதேஷை விட 5 ரூபாய் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்,
அரிசி ,பருப்பு காய்கறிகள் இடைத்தரகர்களால் இங்கே யூக வணிகம் மூலம் செயற்கையாக விலை ஏற்றி விற்கப்படுகிறது, சிமெண்ட் ,இரும்பு,மணல் உட்பட எல்லாவற்றிலும் சிண்டிகேட் அமைத்து கொள்ளையடித்தும் கூட இங்கே விலை மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவாகவோ, அல்லது சமமான விலையிலோ உள்ளது என்பது தான் நிதர்சனம்,
மற்ற உணவுப் பண்டங்களின் விலை இங்கே தான் குறைவாக உள்ளது,வளைகுடா நாடுகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 ரூபாய் என்றால் இந்தியாவில் அது 75 ரூபாயாக இருக்கிறது, நாம் இறக்குமதி வரியாக 50 ரூபாய் தருகிறோம்,அதில் தான் பல மானியங்கள் ஈடுகட்டப்படுகின்றன .அதில் தான் எண்ணெய் நிறுவனங்கள் , மத்திய , மாநில அரசுகள் அந்த வரியில் தின்று கொழுக்கிறது என்பது கண்கூடு. விலைவாசிக்கு முக்கிய காரணியான கச்சா எண்ணெய்யைத் தவிர மற்ற பண்டங்கள் நம் நாட்டிலேயே உபரியாகக் கிடைக்கின்றன,
இனி நாம் இந்தியாவை குற்றம் குறை கூறுவது, இந்தியா இன்னும் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் மேம்பட வேண்டும்,டாலர் யமனுக்கு நிகரான மதிப்பில், நம் நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்ததைப் போல மாற்றம் வர வேண்டும் , ஊழலில் இருந்து சுத்தமாக மீண்டு வர வேண்டும் என்னும் உண்மையான அக்கறையில் மட்டுமே இருக்கட்டும்.
நமது பலமும் மக்கள் தொகை தான் ,நமது பலவீனமும் மக்கள் தொகை தான் என்பதை ஒருவர் நன்கு புரிந்து கொள்வோம்.எந்தத் தொழிலும் நசிந்துவிடாமல் காத்தால் தான் ஒளிமயமான இந்தியா சாத்தியம்.அதற்காக உழைப்போம்.
இது வளைகுடா நாடுகளில் குட்டி மாநிலமான துபாய்க்கும் , நம் சென்னைக்கும் செய்த ஒப்பீடு, இங்கே சம்பளம் அந்நியச் செலாவணியால் [1திர்காம்=16.90] அதிகம் பெறுவது போல இருந்தாலும்,ஒரு குடும்பம்[கணவன்,மனைவி,2 குழந்தைகள்] இங்கே வசிக்க வேண்டும் என்றால் மாதம் தோறும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான தேவைகளுக்கு ஆகிற கூடுதல் செலவுகளை கவனமாக உற்று நோக்குங்கள்.
அந்நியன் படத்தில் வருவது போல இனி யாரேனும் சிங்கப்பூரையும் இந்தியாவையும் முட்டாள்தனமாக ஒப்பிட்டால் நடுவிரலை உயர்த்திக் காட்டுங்கள்,கீழே உள்ள மக்கள் தொகை அட்டவனையில் சிங்கப்பூர் நாடு எங்காவது இருக்கிறதா?எனப் பாருங்கள்.