வீட்டில் புத்தகம் வகைதொகையின்றி சேர்ந்துவிட்டதைப் பார்த்தேன்,கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு புத்தகம் வாங்குவதில்லை,இந்த புத்தக கண்காட்சிக்கு கூட போகவில்லை.
எப்போது மகளுக்கு புத்தகங்கள் வாங்கத் துவங்கினேனோ அப்போது நான் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டேன்.
பதிப்பித்த நண்பர்கள் பிரியமாக தரும் புத்தகங்கள் மட்டுமே சமீபத்தில் என்னிடம் சேர்ந்தவை, எந்த புத்தகத்தையும் யாருக்கும் தருவதில்லை, யாருக்காவது படிக்க தந்தாலும் அவர்கள் புத்தகத்தை திருப்பி தந்ததில்லை,
இதுநாள் வரை கண்ணாடி அலமாரி பின்னால் இருந்தன புத்தகங்கள், இப்போது தலைமேல் மாட்டி இருந்த அலமாரி தட்டுகளில் புத்தக எடை கூடியதால் முன்னெச்சரிக்கையாக இப்படி சுவரில் steel powder coated invisible shelf அடித்து புத்தகங்களை அடுக்கிவிட்டேன்,
வாரம் ஒரு முறை blower இட்டு தூசு அடிக்க வேண்டும், கரப்பான் பூச்சி மருந்து ஓரங்களில் அடிக்க வேண்டும், அந்து உருண்டை வைக்கவும் வேண்டும்.
கண் முன்னால் இருந்தால் வாசிக்காதவற்றை எடுத்து வாசிக்கலாம் என்பதும் ஒரு காரணம்.
இந்த steel powder coated invisible shelf 4 எண்ணிக்கை அமேஸானில் 849₹ வரும், கீழே தரையில் புத்தகங்களை வைத்துப் போற்றுபவர்கள், இப்படி சுவர்களில் அடித்து அளவு வாரியாக புத்தகங்களை அடுக்கி விடுங்கள், அறையில் point of attraction ஆக இருக்கும், இவை மிகவும் உறுதியானது, 30 கிலோ வரை கூட வளையாமல் தாங்குகிறது, எளிதாக do your self பாணியில் நாமே drill செய்து மாட்டி விட முடியும்.
இங்கு அடுக்கிவிட்டு பார்த்தால் மனைவி பக்தி புத்தகங்கள் 100 எண்ணிக்கைக்கு மேலே இன்னும் உள்ளது என்றார், விஷ்ணு சஹஸ்ரநாமமே 10 வெவ்வேறு அளவுகளில் இருந்தன, திருப்பாவை, திருவெம்பாவை ,