1992 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பெண் சிசுக்கொலை மற்றும் சிசுக்கொலைகளை தடுக்கும் தொட்டில் குழந்தை திட்டம் அறிவித்தார்,
இந்தியா முழுக்க கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறியும் பரிசோதனையும் அந்த 1994 ஆம் ஆண்டு முதல் Pre-natal Diagnostic Techniques Act (PNDT)என்ற சட்ட வரையறை மூலம் வழக்கொழிக்கப்பட்டது,2004 ஆம் ஆண்டு முதல் கடுங்காவல் சிறை தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டது, இலை மறைவு காய் மறைவாக கூட குழந்தை ஆணா பெண்ணா என மருத்துவர்கள்,scan technicians என யாரும் பெற்றோரிடம் சொல்ஒது நின்று போனது வரலாறு, 1980 முதல் அமலில் இருந்த அந்த பரிசோதனை நகரங்களில் பல லட்சம் பெண் குழந்தைகள் கருவில் இறக்க காரணமாக அமைந்து ஆண் பெண் பிறப்பு விகிதாசாரத்தை சீர்குலைத்தது கண்ணீர்கதை.
அன்று முதல் " அம்மா" என்ற பட்டத்தை கட்சியினர் அதிகாரபூர்வமாக வழங்கினர், இரண்டு ரூபாய் நோட்டுகளால் வேய்ந்த சால்வையை அவருக்கு போர்த்தி மகிழ்ந்த தருணம்.