ஹேராம் படத்தில் சாகேத்ராமாகவே கமல் வாழ்ந்திருந்தார், அக் கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகர் நடித்தாலும் இத்தனை பேசப்பட்டிருக்காது, அது குருவி தலையில் வைத்த பனங்காயாக தான் இருந்திருக்கும்,
ஹேராம் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஒவ்வொன்று புலப்படுகிறது, இந்த காட்சி பாருங்கள், அரை நிமிடம் தான் வரும் இக்காட்சி, மகாராஷ்டிராவில் மூளைச்சலவை செய்யப்பட்டு சிந்தாந்தத்துக்கு கட்டுப்பட்டு வீடு திரும்பிய சாகேத்ராமன் விடிந்தும் தூங்குகிறார்,
மனைவி மைதிலி அப்பாவியாக உம்மனாம்மூஞ்சி ராமனைக் கொஞ்சுகிறாள், அதை உறங்குவது போல நடித்தபடி உணர்ந்த சாகேத்ராம் உறங்குகிறார்,
அவள் அகன்றவுடன் கண் விழிப்பார், இதே போல ஒரு காட்சி விஸ்வரூபம்- 1 படத்திலும் வரும்,மனைவி பூனை நடை நடந்து படுக்கையில் நுழைந்ததை குறட்டை விட்டுக் கொண்டே கண்விழித்துப் பார்ப்பார், இதில் improvisation செய்திருப்பார், இக்காட்சியின் ஒரே concept மனைவியிடம் ரகசியம் காப்பது,
ஹேராமில் தான் மகாத்மா கொலைசதித்திட்ட தீவிரவாதி என்ற ரகசியம்
விஸ்வரூபத்தில் தான் under cover spy என்ற ரகசியம்
வெவ்வேறு படம், என்ன கண்கள், உடல்மொழி, கமல் தவிர யாரும் இதைச் செய்ய முடியாது
#கமல்ஹாசன்,#ஹேராம்,#விஸ்வரூபம்,#heyram,#kamalhaasan