ஒரு வளர்ந்த குதிரை 1000 கிலோ இருக்குமாம்,பரோடா அரண்மனை மைதானத்தில் அப்யங்கர் போலோ விளையாட்டில் கீழே விழுந்து சுதாரித்து எழுவதற்குள் , அவர் மீது குதிரை படுத்துவிடும்,
அந்த பாரம் தாங்காமல் அப்யங்கர் quadriplegic ( கைகால்கள் செயலிழந்து இடுப்புக்கு கீழே செயலற்றுப் போதல் ) ஆகி அரண்மனை மருத்துவமனை isolation wardல் படுத்த படுக்கையாகி விடுவார்,
இந்தக் காட்சிக்கு மண்ணைத் நோண்டி இடுப்புக்கு கீழே இவர் தன்னைப் புதைத்துக் கொண்டு கால்களை நீட்டி மேலே வைத்து , அதன் பின்னர் மண் தரையில் பள்ளத்தின் மேலே குதிரையைப் படுக்க வைத்து இக்காட்சியை எடுத்திருக்கின்றனர்.
இக்காட்சி சத்யபாமா கல்லூரியின் பின்புறம் உள்ள பெரிய மைதானத்தில் எடுக்கப்பட்டது.
PS: Django Unchained திரைப்படத்தில் இதே போல குதிரை மனிதன் மீது விழும் காட்சி துவக்கத்திலேயே வரும், கருப்பின அடிமைகளை வாங்கி விற்கும் Ace and Dicky Speck சகோதரர்களிடம் Dr.Schultz அடிமை ட்ஜாங்கோவை விலைக்கு கேட்பார்,
அவர்களில் குதிரை மீதமர்ந்த dicky சினம் கொண்டு இவரை சுட எத்தனிக்கையில் , இவர் அவரை சுட்டு வீழ்த்த dicky கீழே விழுந்து அவர் மீது குதிரையும் விழுந்து விடும், குதிரையை scultz , beast என்றே குறிப்பிடுவார்.
#ஹேராம், #கமல்ஹாசன், #அப்யங்கர், #போலோ,#அதுல்குல்கர்னி,#குதிரை