Once upon a time in Hollywood (2019), சுவாரசியமிகுந்த கால எந்திரப் பயணம் என்றால் மிகையில்லை, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உண்டு, தேடிப் படிக்கலாம்.
எத்தனை கற்பனை வளம் ? இப்படி அபாரமான ஒரு டஜன் கதாபாத்திரங்களை 25 அத்தியாயங்கள் (அல்லது 25 scenes ) கொண்ட தன் முதல் நாவல் ஆக எழுதி, அதை திரைப்படமாக்கி சாதித்திருக்கிறார் இயக்குனர் Quentin Torentino,
வாய்ப்புகள் தேய்ந்து குணசித்திர கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் , சிகரட் விளம்பரங்கள் செய்து காலம் தள்ளி வருகிற தொலைக்காட்சி சீரீஸ் மற்றும் திரைப்பட நடிகர் ரிக் டால்டன் ஆக Leornado DiCaprio ,
அவரின் டூப் மற்றும் கார் ஓட்டி க்ளிஃப் பூத் ஆக Brad pit ,இவர் இரண்டாம் உலகப்போரில் இரண்டு பதக்கங்கள் வாங்கியவர், வாயாடி மனைவியை கொன்றவர், வழக்குகள் போதும் என முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் ஏதாவது வம்புகளை சந்திப்பவர்,
இந்த இரு உச்ச நடிகர்களுக்கும் சமமான டைட்டில் கார்ட், மற்றும் திரைக்கதை, screen space ,opening shot என அபாரமான திரைப்பகிர்தல் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் QT,
நட்புக்கு இலக்கணமாக இந்த இருவரின் கதாபாத்திரம் அத்தனை precise ஆக எழுதப்பட்டுள்ளது, மைக்கேல் மதனகாமராஜன் திரைப்படத்தில் பீம் எப்படி மதனுக்கு நிழலாக வருவாரோ அப்படி ஒரு உயிரோட்டம் உள்ளது, unconditional collaboration and friendship மிளிர்கிறது.
எனக்கு Leornado DiCaprio செய்த Rick dalton நடிகர் கதாபாத்திரம் பார்க்கையில் வெள்ளிக்கிழமை நாயகர், மக்கள்கலைஞர் என பெயரெடுத்த நம் நடிகர் ஜெய்சங்கர் தான் நினைவில் வந்து போனார், அவரின் அந்திமக்காலத்தில் படவாய்ப்புகள் குன்றுகையில் மெல்ல வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களுக்கு தன்னை ஒப்புதந்து ஜோதியில் கலந்தது நினைவுக்கு வந்து வந்து போனது.
மேனேஜர் மார்வின் ஷ்வார்ஸ் (Alpacino ) ரிக் டால்டனின் அந்திமக்காலத்தை நன்கு உணர்ந்தவர், அவரை நேரில் அழைத்து பொட்டில் அடித்தது போல அவரின் சூழ்நிலையை சுட்டிக்காட்டி ஒரு டஜன் இத்தாலி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பிடிக்கிறேன் ,தொடர்ந்து நடி அதுவே உன்னை சினிமாவில் பிடித்து நிற்க வைக்கும் என்று சொல்கிறார்.
வெளியில் வந்த ரிக் டால்டன் தன் டூப் தோளில் சாய்ந்து வெடித்து அழும் இந்த காட்சி அபாரமானது,
டூப் BP, ஏன் அழுகிறாய்? ,
LD என் அந்திமத்தை இப்படி முகத்துக்கு நேராய் சொல்லிவிட்டான்,
BP என்ன சொன்னான்?
LD உண்மையை தான் சொன்னான் விடு ,
BPஅசகாய தீரன் நீ அழாதே, நீ அழுவதை யாரும் பார்க்கக்கூடாது, இந்தா என் கூலர்ஸ் அணிந்து கொண்டு அழு,
இப்படத்தை உணர்ந்து கொண்டாட அத்தனை விஷயமுண்டு, ஆனால் நாம் தேடி வாசிக்க வேண்டும், கால எந்திரத்தில் பயணித்து ஒப்பிடுதல் நிகழ்த்த வேண்டும், அத்தனை போதும், இப்படத்தின் nuance ஒவ்வொன்றும் அற்புதமானவை, அடுத்தடுத்து எழுத வேண்டும்.