மூன்று வருடங்கள் முன்பு வரை பெரும் குப்பை மேடாகவே மாறி காட்சி தந்த சிட்லபாக்கம் ஏரி இன்று மிக அழகிய நடைபயிற்சி பூங்காவாக நம்பமுடியாதபடி மாறியுள்ளது,இந்த பகுதி பொது மக்களின் அறப்போராட்டம் மற்றும் தொடர்ந்த கவனஈர்ப்பு முன்னெடுப்புகளால் இந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த paver block நடைபாதையில் ஒரு முறை சுற்றி வந்தால் சுமார் 2 கிமீ வருகிறது,இங்கு தினம் சென்று நடைபயிற்சி செய்ய வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பறவை ஆர்வலர்கள் உங்கள் கேமரா பைனாகுலரை கொண்டு செல்ல மறக்காதீர்கள்.
நீர் நிலைகளை காப்போம், அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை மடை மாற்றிவிடுவோம்.