இசையில் தொடங்குதம்மா பாடல் பின்னணியில் ஒலிக்க , ராம்லீலா வைபவத்தில் பாங் குடித்து விட்டு போதையில் நடக்கும் சாகேத் ராம் பார்வையில் கையில் அம்பை பிரயோகித்தபடி நிற்கும் ராமன் பொம்மை தெரிகிறது சற்று தள்ளி அரக்கர் தலைவன் ராவணன், கொல்லப்பட வேண்டியவன்.
இப்போது பால்கனியில் தோன்றிய மகாராஜா ராமன் கையில் உள்ள அம்பின் நுனியில் உள்ள திரியை நோக்கி நீண்ட நெருப்பு அம்பை எய்கிறார்,அது ராமன் கையில் உள்ள பாணத்தை உயிரூட்டி கிளப்பி ராவணன் பொம்மையைத் தாக்கி எரியூட்டுகிறது, ஆரவாரம், கரகோஷம் எழுகிறது
எத்தனை அழகாக சாகேத் ராம் போன்ற கொலைப்படை போராளிக்கு, பின்னணியில் இருந்து மகாராஜா நிதி உதவி செய்வதற்கு shot conceive செய்துள்ளதைப் பாருங்கள் ,
கண்டிப்பாக வேறு எந்த பெரிய சினிமா நிறுவன தயாரிப்பாக இருந்தாலும் இந்த நாயகன் பாங் குடிக்கும் "இசையில் தொடங்குதம்மா "பாடல் எதற்கு? அநாவசிய செலவு என்று தூக்கியிருப்பார்கள்,
முதலில் கமல்ஹாசனே அடுத்த பத்து நிமிடத்தில் பொல்லாத மதனபாணம் பாடல் வருகிறதே என்று இப்பாடலை நுழைக்க மறுக்க இசைஞானியே இப்பாடலை எழுதி வங்காள பாடகர் அஜய் சக்ரபர்த்தியை தமிழில் அறிமுகம் செய்தார், இந்த premiere பாடகர் படத்தில் திட்டமிடாத ஒரு பாடலைப் பாடப்போவது தயாரிப்பு நிர்வாகி சந்திரஹாசனுக்கு தெரிய வர,ஏற்கனவே படத்தின் செலவு அதிகமாகிவிட்டதே என தயங்கினார்கள். சரி இப்பாடலை பதிவு செய்யவேண்டாம் என்று பாடகர் அஜய் சக்ரபொர்த்தியை அழைத்து சொல்ல, அவரோ,எனக்கு பணமே வேண்டாம். நான் என் மகளோடு வந்து இசைஞானியைப் பார்க்கவேண்டும். என் மகளுக்கு அவர் ஆசிர்வாதம் வேண்டும் ,எனவே நானும் மகளும் ரெகார்டிங் ஸ்டுடியோவிற்கு வருகிறோம் என தன்னார்வத்துடன் வந்து பாடித்தந்தாராம்.
அன்று சொல்லி அடித்தார்கள், இப்பாடல் மக்கள் மனதில் நின்றது
ஒரு இரவுப்பாடல் அதில் நிறைய detail வைக்க வேண்டும் ,மிகுந்த சவாலான பணி,இதை இயக்குனர் கமல் அத்தனை சிறப்பாக எடுத்திருப்பார்.
இப்பாடல் முடிந்து பத்து நிமிடத்திலேயே பொல்லாத மதன பானம் பாடல் வேறு உள்ளதே என்றார்கள், பயமுறுத்தினார்கள், டிஜிட்டல் இல்லை ஃபிலிம் ,விளையாட்டில்லை, இயக்குனர் கமல் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளவில்லை,
ஒரு முறை இசை அமைப்பாளர் L.சுப்ரமணியத்தை அவர் பெரும்தொகை கேட்டார் என துணிந்து மாற்றினார்,
பாடல் வரிகளுக்கு lip sink செய்த காட்சிகளை இசைஞானியை வைத்து திரும்பவும் எடுக்க தயாராகவே இருந்தார்,
ஆனால் இசைஞானி அக்காட்சிகளை திரும்ப எடுக்காமல் அதே lip sink மற்றும் பாடல் வரிகளுக்கு உலகதரத்தில் இசை அமைக்கிறேன் என்றார்,கமல்ஹாசனின் இசைஞானி மீதான நம்பிக்கை இப்படி அற்புதமாக விளைந்தது,
படத்தில் முதலில் நடித்த மோகன் கோகலே திடீரென இறந்து விட புதிதாக அதுல் குல்கர்னியை வைத்து ஏற்கனவே எடுக்கப்பட்ட 90% காட்சிகளை reshoot செய்தவர் கமல்ஹாசன்,ஒரு படைப்பை reshoot செய்யும் நுட்பமான கலை எல்லோருக்கும் கைவராது, சமீபத்தில் விக்ரம் மகனின் அறிமுக திரைப் படத்தை இரண்டு முறை reshoot செய்தும் என்ன ஆனது பாருங்கள்?
#கமல்ஹாசன்,#ஹேராம்,#ராம்லீலா,#இசையில்தொடங்குதம்மா,#பாங்,#விக்ரம்கோகலே,#kamalhaasan