1968 | Phanthom India|The Indians and The Sacred |Episode 3| லூயி மாலி | திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வர் கோவில்.
ஃப்ரெஞ்ச் இயக்குனர் / ஒளிப்பதிவாளர் லூயி மாலி சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம் மலைக்கோவிலுக்கு கழுகுகளைப் பார்க்க விஜயம் செய்கையில் எடுத்த காணொளி
நான் 25 வருடங்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றம் கழுகுகளை தரிசனம் செய்துள்ளேன்.இந்த மொட்டைப் பாறையில் பகல் 12 மணிக்கு சரியாக ஆகாயத்தில் மூன்று முறை சுற்றி வட்டமிட்டு வந்திறங்கும், கோவில் அந்தணர்கள் இருவர் குடங்களில் இருந்து உருட்டித் தரும் சர்க்கரைப் பொங்கலை உண்டுவிட்டுச் செல்வது கண் கொள்ளாக் காட்சி.
கழுகுகள் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு (22 வருடங்களுக்கு மேலாக )உணவு உண்ண வருவதில்லை என்று கோயில் ஊழியர் சென்ற வருடம் நான் கோவிலுக்குப் போயிருக்கையில் பகிர்ந்தார், கழுகுகள் இரண்டும் சாப விமோசனம் பெற்று விட்டதாகச் சொன்னார்.
கழுகுகளின் புராணக்கதை , பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் வந்ததை கண்டு பேரானந்தம் அடைந்து, பதட்டத்தில் சாரூப பதவி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக சாயுச்சிய பதவி வேண்டும் என்று கேட்டுவிட்டார்கள். “நீங்கள் 8 பேர். இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்கு பணி செய்வீர்கள்.” என்று சிவன் இவர்களுக்கு வரம் தந்தார்.
இவர்கள்தான் முந்தய யுகங்களில் சண்டன், பிரசண்டன் எனவும், சம்பாதி, சடாயு எனவும், சம்புகுந்தன், மாகுத்தன எனவும் இரண்டு இரண்டு பேராக கழுகுகளாக பிறந்து இறைவனை தொழுது வந்தார்கள். எட்டில் மீதி இரண்டு பேர் இந்த கலியுகத்தில் பூஷா, விதாதா என்ற இரண்டு கழுகுகளாக பிறந்து பலகாலம் பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர்.
சரியாக பகல் பன்னிரெண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் திருக்கழுகுன்றம் வந்து பண்டாரங்கள் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறது என்ற தகவலை 03.01.1681 வருடம் டச்சுக்காரர்கள் இந்த ஆலயத்தின் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு கழுகுகளும் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்தன. மதிய உணவு உண்ண திருக்கழுகுன்றம் வந்து உணவு உண்டவை, இரவு இராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் நித்திரை செய்தன என்று ஸ்தல புராணம் சொல்கிறது.
#திருக்கழுக்குன்றம்,#கழுகுகள்,#லூயி_மாலி,#Phantom_India,#Louie_MIndia,#The_Indians_and_The_Sacred