நான் பாடும் பாடல் (1984) விதவை திருமணத்துக்கு எதிராக தமிழ் சினிமாவில் உருவான முக்கியமான படைப்பு.
திருமணமாகி வெறும் மூன்று நாளில் கணவனை இழந்த விதவை வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமல் வாழ வேண்டும், அந்நிய ஆடவருடன் பேசவோ , கதைப் புத்தகம் கூட படிக்கவோ கூடாது என வலியுருத்தும் கதை.
இதில் கடைசிக் காட்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் பல்சுவை நாவல் எழுத்தாளரான சிவகுமார் தன் தீவிர வாசகி கைம்பெண் அம்பிகாவை திருமணம் செய்யும் நோக்கில் புற்றுக்கோயிலில் நாக்கன்னிகை முன் வைத்து நெற்றியில் குங்குமம் இடுகிறார், அப்போது வெகுண்டெழுந்த அம்பிகா அவர் கன்னத்தை அறைந்து திருப்பி விடுகிறார், உடன் நிற்காமல், நான் உன்னிடம் (ஒருமை தான்) பேசியது தான் நான் செய்ததிலேயே பெரிய தவறு, அதனால் தான் நீ என்னை தொட்டு குங்குமம் இட்டாய், என நிற்காமல் பொங்கல் வைக்கையில் எரியும் கொள்ளியை எடுத்து தன் நெற்றிக் குங்குமத்தை சொறிய அங்கே பெரிய வடு உருவாகிறது. குமரி ஔவை கிழவி ஔவையாக மாறியது போல் லட்சணமாக உள்ளதால் தனக்கு ஆண்களிடமிருந்து proposal வருவதை விரும்பாமல் அவலட்சணமாக மாறும் பெண்ணின் கதையாக முடிகிறது.
நடிகர் சிவகுமார் கலாசார காவலர் மட்டுமல்ல, கவின்கலையில் விற்பன்னர் கூட என்பதால் தத்ரூபமான தீயினால் சுட்ட வடுவுக்கு வேண்டி அற்பணிப்புடன் இந்த தீப்புண் மேக்கப்பை வர்ணங்களை குழைத்து cast in situ உருவாக்க இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அங்கே இயக்குனர் பெயர் வராமல் end card வருகிறது.
"பண்பாட்டுக்கு இலக்கணமான
நமது மண்ணில்
இன்னும், இப்படியும் சில மலர்கள்
இருக்கத்தான் செய்கின்றன
நான் உருவாக்கிய இந்த கௌரி
மலர்ந்தும் மலராத பாதிமலர்"
இந்த இயக்குனர் ஊர்நாட்டில் கிழவிகள் கிழவர்கள் பேசிய வம்புக்கதைகளை புரணிகளை அப்படியே கதையாக்குவதில் வித்தகர், குறிப்பாக தன் படைப்புகளில் கைம்பெண்களின் தவிப்புகளை கொதிப்புகளை தாபங்களை காட்டுவதில் வித்தகர்.
தமிழ் சினிமா கடந்து வந்த பாதையை ஆவணப்படுத்த வேண்டி இந்த படங்களை பார்க்க வேண்டி உள்ளது.
புவனா ஒரு கேள்விக்குறி படத்தை தொடர்ந்து இந்த படமும் கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தில் மிக அழகாக படமாக்கப்பட்டிருந்தது, ஒளிப்பதிவு ராஜராஜன், இசைஞானி இசையை அடித்தளமாக கொண்டு கோபுரமாக எழுந்த படைப்புகளில் மற்றும் ஒரு படம் தான் "நான் பாடும் பாடல்".
இதில் இசைஞானி இசையமைத்த பாடலை படமாக்கியது இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசைப்பதிவு கூடத்தில் வைத்து என்பது சுவையான trivia, படத்தில் எழுத்தாளர் சிவகுமார் எழுதிய நாவலின் பெயர் "மெல்ல திறந்தது கதவு"இயக்குனரின் அடுத்த படத்துக்கு கட்டியம் கூறிய தலைப்பு.
#பண்பாடு, #இலக்கணம்,#ஜல்லி,#மண்,#மலர்,#ஆயிரம்காலத்துபயிர்,#மலர்ந்தும்மலராதபாதிமலர்