ஹேராம் படம் பார்ப்பவர்கள் அதில் சாகேத்ராம் உபயோகிக்கும் வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்த Automatic Single cum machine பிஸ்டலை சிலாகிக்காமல் இருக்க மாட்டார்கள்,
அந்த பிஸ்டலின் மாடல் "MAUSER C96 BROOMHANDLE - D14385" ஜெர்மன் தயாரிப்பு,இங்கு மகாராஜா அறையில் காட்டப்படும் வெல்வெட் rackல் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை துப்பாக்கிகளும் உண்மையானவை, collector piece,எதுவும் வெற்று கிடையாது.
( broom handle என்றால் துடைப்பக்கட்டை என்று அர்த்தம்)
இந்த பிஸ்டலை அழகாக unslide செய்து butt stock உறைக்குள் வைத்து மூடிவிடமுடியும், பிஸ்டலின் கைப்பிடி மட்டும் வெளியே துருத்தியபடி தெரியும், இந்த பிஸ்டலை தான் ஆசாத் சோடா ஃபேக்டரிக்கு சொந்தமான சோடா crate ற்குள் ஒளித்து வைப்பார் சாகேத்ராம்.
நான் பார்த்த இந்திய சினிமாவில் இத்தனை perfect ஆக 1940 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு cult பிஸ்டலை இத்தனை நிஜமாக காட்டியது ஹேராம் படத்தில் மட்டுமே, சாகேத் ராம் இதைத் தேர்வு செய்த உடன் மகாராஜா chosen well,a broom handle,Mauser - என்பார், அதை வைத்து தான் இதை இணையத்தில் தேடினேன்,பின்னர் கமல் ஹேராம் படத்தின் மீள் திரையிடலிலும் இந்த Mauser துப்பாக்கியா? மனைவியா? என்ற சூழலில் அந்த மதனபாணம் பாடல் வைத்ததைக் குறிப்பிட்டார்.
இந்த Mauser துப்பாக்கிக்கு ஆளுயர scale model replica ஒன்றும் செய்திருப்பார்கள், அது பொல்லாத மதன பாணம் பாடல் முடிந்தவுடன் வரும், அந்த துப்பாக்கியை விரக தாபத்துடன் பெண்ணை புணர்வது போல தழுவி முயங்குவார், அது போல காட்சிகள் எல்லாம் இதுவரை யாரும் யோசித்ததில்லை, இனியும் யோசிக்கப் போவதுமில்லை.
இது 1 கிமீ வரை சுடும்,இதில் பத்து மற்றும் இருபது குண்டுகள் அடங்கிய cartridge மாடல்கள் உள்ளன, இந்த துப்பாக்கி இதுவரை உலக சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளன,இந்த Mauser 96 broom handle முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மனங்கவர்ந்த பிஸ்டல், இது இன்றும் உலகெங்கும் உள்ள art collector களின் ஏகோபித்த தேர்வு, இதை ரஷ்ய படங்களில் அதிகம் பார்க்கலாம், 1968 ஆம் ஆண்டு வெளியான the great silence என்ற ஆங்கில வெஸ்டர்ன் க்ளாசிக் படத்தில் இந்த pistol ஐ நாயகர் jean Louis " butt stock " ( மரக்கட்டை பகுதி ) பொருத்தாமல் படம் முழுக்க உபயோகித்திருப்பார், இதைப் பற்றி Jonathan Ferguson என்ற curator இந்த mauser c96 பிஸ்டல் மீது காதலாக கசிந்துருகி புத்தகமும் எழுதியுள்ளார், அந்த புத்தகத்தைத் திறந்து வைத்து refer செய்து சாகேத்ராம் தன் Lathe ல் இந்த பிஸ்டலை அக்குவேறாக பிரித்து மேம்படுத்தும் காட்சி படத்தில் வரும்,
அந்த காட்சியில் live sound ஐ உணர முடியும். இரவு முழுக்க வெல்டிங் வேலை செய்யும் சாகேத்ராம், மார்கழி பஜனை சத்தம் இடது பக்கம் கேட்க ,மாடி சன்னலைத் திறந்து பார்ப்பார்,அங்கே விடிந்திருக்கும் , பஜனை கோஷ்டி நவநீத சோரா கோபாலா,நந்தநந்தனா கோபாலா என பாடிக் கடப்பார்கள்,
சட்டென விகடன் படிக்கும் காட்சி வந்தே விடும் எனக்கு மிகவும் பிடித்தது கொலையாளி சாகேத்ராமின் இருட்டு அறை
PS: Mauser பிஸ்டல் தோன்றும் படங்களின் நீண்ட பட்டியல் இங்கே
http://www.imfdb.org/wiki/Mauser_C96
https://stateofguns.com/how-mauser-almost-killed-ww2-2181/
கமல்ஹாசனின் 2002 ஆம் ஆண்டின் ஒரு அரிய ஆங்கில பேட்டி இங்கே https://www.mansworldindia.com/currentedition/from-the-magazine/kamal-haasan-genius-retreat/
#MauserC96,#broomhandle,#கமல்ஹாசன்,#kamalhaasan,#thegreatsilence,#ஹேராம்,#heyram