மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் தான் முதலில் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது, அவரிடம் ஆறு மாதத்துக்கு தேதிகள் இல்லாதிருக்க ,காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் B.S.கௌரிசங்கர் ( கன்னட சினிமா ) , பேசும்படம் (1987) படத்தை அடுத்து மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு மீண்டும் இணைந்து ஒளிப்பதிவு செய்தார்,அத்தனை ரசனை கொண்ட ஒளிப்பதிவாளர், நவீன கேமரா தொழில்நுட்பங்கள், dull lighting யுத்திகள் பற்றி விசாலமான அறிவு கொண்டவர் என்பதால் இவரை விட்டு விடவும் மனமில்லை,
கமல்ஹாசன் இவரிடம் கேட்ட ஒரே கேள்வி, படத்தின் கடைசியில் ஒரே ஃபரேமிற்குள் patch எதுவுமின்றி நான்கு சகோதரர்களும் தோன்ற வைக்க வேண்டும் அது முடியுமா ?
இந்த கேள்விக்கு, இவர் no problem என்று சொல்ல இப்படம் துவங்கியது,
ஒளிப்பதிவாளர் ஏற்கனவே ஒத்துக்கொண்ட சில கன்னட படங்கள் பெங்களூரில் சில காட்சிகள் முடிக்காமல் இருக்க , படத்தில் மதன் மெஹல் பெங்களூரில் இருப்பதாக கதையை மாற்றி விட்டார் கமல்ஹாசன்,நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தோம் என்றால் நமக்கு இரட்டிப்பு உதவியாக கிடைக்கும் என்பார்களே அது போல படத்தின் ஒளிப்பதிவு அத்தனை தரமாக வந்தது.
இவரின் சட்டகங்கள் வெகுஜனம் மற்றும் கலைப்படம் இரண்டிலும் நின்று பேசும், இயற்கையான ஒளியமைப்பு , குறைந்த ஒளி ஒளிப்பதிவு எல்லாமே அத்தனை ரசவாதமாக இருக்கும்,ஒளிப்பதிவில் apt ஆன filtersகள் பயன்படுத்திய முன்னோடி, இந்தப் படத்தில் குறிப்பாக சுந்தரி நீயும் பாடலின் நேர்த்தி இவரது திறனுக்குச் சான்று,இதில் பட்டாடைகள் மீது மங்கலான ஒளி நிகழ்த்தும் ஜாலம், நாலுக்கெட்டு வீட்டின் கண்ணாடித்தரை மீது ஒளி நிகழ்த்தும் ஜாலம், தூண்கள் மீது ஒளி நிகழ்த்தும் ஜாலம், என அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பார்,contrast sense ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டிருக்கும்,யின் யாங் கோட்பாடு போல ஒளி மற்றும் நிழலின் நடனம் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்பட்டிருக்கும், உதாரணத்துக்கு கருங்காலி மர சப்பர மஞ்சத்தில் கமல் அமர்ந்திருக்க அருகே side table மீது வெள்ளி பால் சொம்பு, வெள்ளி பழத்தட்டு ,வெள்ளி லோட்டா, வெள்ளி பன்னீர் சொம்பு என நிறைவாக balance செய்யும், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளே எப்படி இயற்கை வெளிச்சம் கவியுமோ அப்படி கொண்டு வர மெனக்கெட்டவர்கள் பெரிய வெங்கல வாழைப்பூ விளக்கை ஒற்றை முகமாக வலப்புறம் எரிய விட்டு balance ஆக பளபளவென்ற கருங்காலி தூணை இடப்புறம் வைத்து shot compose செய்திருப்பார், ராஜா ரவிவர்மாவின் தைலவண்ண ஓவியம் போன்ற நகாசு வருவதற்கு வேண்டி பீடா கடையில் இருக்கும் பெரிய பெங்காலி வெங்கல தாம்பாலத்தை உத்திரத்தில் இரண்டை முத்தாய்ப்பாக மாட்டி வைத்திருந்தார் கலை இயக்குனர் பெக்கட்டி ரெங்காராவ்,இது சிறந்த ஒளிவாங்கியாகவும் செயல்பட்டு அந்த நாலுக்கெட்டு வீடு அரங்கையே சிறப்பாக்கியிருக்கும்,இந்த அரங்கு வீனஸ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டது, இந்த கிணறு கிணற்றடி கமல்ஹாசனின் எல்டாம்ஸ் ரோடு கிணற்றடி, இந்த கண்ணாடித் தரையின் தகதகப்பை கொண்டுவர நல்ல முற்றிய கொப்பரைத்தேங்காய் துருவி பூவை வறுத்து காடா துணியில் மூட்டை கட்டி தேய்த்து பத்மநாபபுரம் அரண்மனை கண்ணாடித் தரையை கொண்டு வந்துள்ளனர், இதில் சப்பர மஞ்சத்தில் ஆட என வருகையில் பல்லக்கில் செல்வர், ஆனால் பத்மநாபபுரம் அரண்மனை சப்பரமஞ்சம் என்பது 64 வகை மருத்துவமரங்களால் intricate motif வேய்ந்த ஒரு கட்டில் ஆகும்.இதில் சப்பர மஞ்சத்தை top view ல் கேமராவை சுழலவிட்டு காட்சியை படமாக்கியிருந்தனர்.
இரவு ஒளியமைப்பில் சிவராத்திரி பாடல் இன்றும் ஒரு இதமான mood lighting எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான பாடம்.
இன்று pre wedding shoot album டிஜிட்டலில் செய்கிறார்களே? அதைப் போல ஒரு richness பாருங்கள்,இவர் இயக்குனரும் கூட, இவரது மகள் நடிகை ரக்ஷிதா( தம்,மதுர)
இப்பாடல் படமாக்கிய விதம் பற்றி ஊர்வசி பேட்டி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10158268784996340&id=750161339
#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#கமல்ஹாசன்,#bs_கௌரி_சங்கர்,#ஒளிப்பதிவு