மௌலி அவர்களின் முழுப்பெயர் T. S. B. K. Mouli,அதன் விரிவாக்கம் திருவிடைமருதூர்.சம்மந்தமூர்த்தி கனபாடிகள்.பால்கிருஷ்ண சாஸ்த்ரிகள் .மௌலி.என்பதாகும்,இப்பெயரை படிக்கையில் தில்லுமுல்லு படத்தில் ரஜினியின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சந்திரன் என்னும் பெயர் நினைவுக்கு வரும்,அப்பெயரை விட பெரிதாக இருக்கும்.
நிழல் நிஜமாகிறது படத்தில் வார்த்தைக்கு வார்த்தை வாத்ஸ்யாயனா என்று சொல்லிக்கொண்டிருக்கும் மௌலியின் மன்மத நாயுடு கதாபாத்திரம் மறக்கமுடியாதது, தமிழ் சினிமாவில் சற்றும் ஆபாசமின்றி voyeurism தொனிக்கும் கதாபாத்திரங்களில் முதன்மையானது மன்மத நாயுடு கதாபாத்திரம்,மௌலி அவர்கள் 1973ல் வெளியான சூர்யகாந்தி திரைப்படத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும்,நடிப்பில் முறையான அங்கீகாரம் நிழல் நிஜமாகிறது படத்தில் கே.பாலசந்தர் அவர்களால் தான் அமைந்தது.
ஒரே பார்வையாலேயே கடந்து போகும் பெண்ணின் அங்க அளவுகளையும் எடையையும் துல்லியமாக சொல்லிப் பெருமை பட்டுக்கொள்வார்,
யாராவது உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா?என்று ஏதாவது புத்திமதி சொன்னால்,நான் அரசமரத்தடிப் பிள்ளையாராட்டம், ஹார்ம்லெஸ் ஃபெல்லொ,பார்க்கிறதோட சரி,அழகை ரசிப்பேன்,அடைய நினைக்க மாட்டேன் அவ்வளவு தான் என்பார்.அப்படத்துக்காக தன்னுடைய காமெடி ட்ராக்கிற்கு 16 சீன்கள் இவரே எழுதி இயக்குனரிடம் தந்து படத்தில் சேர்த்தாராம்.இயக்குனர் முழு சுதந்திரம் தந்து பணியாற்ற வைத்ததை அவ்வப்பொழுது பொதுமேடைகளில் நினைவுகூர்வார் மௌலி.
இவரின் இயல்பான நடிப்புக்காகவே நான் நாதஸ்வரம் சீரியல் பார்ப்பேன்.அதில் பல நீளமான ஷாட்களை[அதிக பட்சம் 18 நிமிடங்கள்] ஒரே டேக்கில் ஓக்கே செய்து பிரமிப்பூட்டும் திறமைசாலி நடிகர்.