இந்த காணொளிகளை இங்கே காணவும்
மௌனராகம் படத்தில் வரும் மிஸ்டர் சந்திரமௌலி காட்சி இந்தியில் மிஸ்டர் துர்காபிரசாத் என்று மாற்றியிருக்கிறனர்,
இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் chunky pande என்ற இந்தி நடிகர் பஃபூன் போல ஈயடிச்சான் காப்பி அடித்து அந்த கதாபாத்திரத்தை சொதப்பியிருந்தார்,
இங்கே காஃபி சாப்பிட அழைப்பதை அங்கே டீ சாப்பிட அழைப்பதாக மாற்றினர், மௌனராகம் படத்தின் காஃபி ஷாப் tic tac restaurant முன்பு இஸ்பஹானி சென்டர் இருந்த இடத்தில் இருந்தது, இன்று ஜெமினி மேம்பாலம் இறக்கத்தில் gn chetty சாலையில் உள்ளது,
இயக்குனர் மணிரத்னம் தன் ஸ்க்ரிப்டில் திவ்யாவின் அப்பாவுக்கு பெயர் எதுவும் வைக்காமல் இருக்க, ரா.சங்கரன் அவர்கள் நடித்த அன்று தன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என கேட்க ,
அப்போது இந்த பெயர் சூட்டப்பட்டதாம்,இது படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் பெயர், அந்த neck of the momentல் அவர்களுக்குள் இந்த பெயரை விவாதித்து சூட்டியதாக ரா.சங்கரன் அவர்கள்,சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்தார்.
நடிகர் கார்த்திக் ,நடிகை ரேவதி இந்த கதாபாத்திரத்தை எப்படி சிறப்புற உயர்வாக செய்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ள kasak இந்தி வடிவத்தின் இதே காட்சியை இங்கே இணைத்துள்ளேன், நடிப்பும் கதாபாத்திரமாக transform ஆவதும் சுலபமில்லை பாருங்கள்,ஏதோ picnic போவது போல இந்தியில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.
காப்புரிமை வாங்கிய reference material கையில் லட்டு போல இருந்தாலும் சிலரால் perfection தரமுடியாது என்பதற்கு உதாரணம் இது
#மௌன_ராகம்,#kasak,#கார்த்திக்,#ரேவதி,#மிஸ்டர்_சந்திரமௌலி,#மணிரத்னம்,#பிசி_ஸ்ரீராம்