இயக்குனர் K.சுப்ரமணியம் | ிதியாகபூமி 1939 திரைப்படம் ஆய்வு


இயக்குனர் K.சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய  தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளியானது, கல்கி கிருஷ்ணமூர்த்தி கதை., இப்படம் தயாரிக்க S.S.வாசன் அவர்கள் பெரும் நிதி அளித்து உதவியுள்ளார்,இப்படம் கொண்டிருந்த தேசபக்தி பாடல்கள் மற்றும் சுதந்திர தாகம் உரைக்கும் வசனங்களால் இப்படத்தை திரையிட்டு வெற்றிகரமாக ஓடுகையில் தடை செய்துவிட்டது பிரிட்டீஷ் இந்திய ஏகாதிபத்ய அரசு   ,

 இப்படம் இந்தி மொழியிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இந்தி பதிப்பில் கதாநாயகி சாவித்ரியின் தந்தை சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவன் அவர்கள் தோன்றிய கதாபாத்திரத்தில்  பரத் பூஷன்  நடித்துள்ளார், நடிகை கீதா சாவித்திரியாக  நடித்தார்.  இந்தி பதிப்பில் சாருவாக குழந்தை நட்சத்திரம் அபர்ணா அனந்தராமன் நடித்துள்ளதை அறியமுடிகிறது.

படத்தின் பிரதி புனே திரைப்படக் கல்லூரியின் archives ல் மட்டுமே உண்டு, 1989 ஆம் ஆண்டு K.சுப்ரமணியம் அவர்களின் மகன் S.கிருஷ்ணஸ்வாமி ஃபில்மில் இருந்து வீடியோ திரைப்படமாக மாற்றி வெளியிட்டார், அந்த பிரதியே யூட்யூபில் காணக்கிடைக்கிறது.

படத்தின் கதைத்திருப்பங்களை சுருக்கமாக tile card அட்டைகளாக வெளியிட்டிருந்தது சுவாரசியமாக இருந்தது, படத்தின் பல காட்சிகளை அடையார் பிரம்மஞானசபை ஆற்றங்கரை மற்றும் மயிலை கபாலி கோயில் குளம், மவுண்ட் ரோடு என காட்சிப்படுத்தியிருந்தனர்.

படத்தின் கதை:- 
நெடுங்கரை என்னும் கிராமத்தில் ஒருநாள் புயல் காற்றினாலும் அதிக மழையினாலும் வெள்ளம் ஏற்பட்டு அந்த ஊரின் குடிசைகளில் வசிக்கும்  ஏழை மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்க, அவர்களுக்கு அவ்வூர் பிரபல மிராசுதார் சம்பு சாஸ்திரிகள் (பாபநாசம் சிவன் ) தன் வீட்டு மாட்டுக் கொட்டிலில் தங்க இடம் கொடுக்கிறார். 

அதன் காரணமாக சம்பு 
சாஸ்திரிகளை அந்தக் கிராமத்தில் பிற ஜாதி இந்திக்கள் ஜாதி ப்ரஷ்டம் செய்து ஒதுக்கி வைக்கிறார்கள்.
சம்பு சாஸ்திரிகளுக்கு சாவித்திரி (S.D.சுப்புலட்சுமி) என்று ஒரே பெண். சாவித்திரியை கல்கத்தாவிலுள்ள ராஜாராமய்யரின் குமாரனான ஸ்ரீதரன் B. A. (கே.ஜே.மகாதேவன்) என்பவருக்கு அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் தாயார் தங்கம்மானின் வற்புறுத்தலின் பேரில் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்ரீதரன் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறான். அவன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக இருக்கும் சுசி என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் காதல் வலையில் விழுந்து அவளை வீட்டிக்கே ஆண் வேடமணிவித்து அழைத்து வந்து துகிலுரிந்து வால்வ் ரேடியோவில் பாட்டு கேட்டு ஆடி இன்பம் துய்த்து அன்யோன்யமாக இருக்கிறான் .

சாவித்திரி தாயில்லாப் பெண், தன் மாற்றாந்தாயாரான மங்களத்தின் கடும் சொற்கள், காதில் படாமல் கல்கத்தாவுக்கு தன் புக்ககத்திற்குப் போகும் நாளை சாவித்திரி எதிர் பார்த்த வண்ணமிருக்கிறாள்,கணவன் வீட்டாரின் கடிதம் வருவதில்லை.

சம்பு சாஸ்திரிகள் ஜாதி ப்ரஷ்டம் செய்யப்பட்டிருக்கும் விஷயம் நெடுங்கரை கிராம வாசிகளின் கடிதம் மூலம் சாவித்திரியின் மாமனார் ராஜாராமப்பருக்குத் தெரியவும் தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வருவதற்கிருந்த ஸ்ரீதரனின் பிரயாணம் நின்று போய் விடுகிறது.

மாப்பிள்ளை வராததினால் சம்பு சாஸ்திரியும் சாவித்திரியும் ஏமாற்றமடைகிறார்கள். சம்பு சாஸ்திரிகளின் இளையதாரம் மங்களமும், அவள் தம்பி காதுகேளாத வைத்தியும், அவள் தாயார் சொர்ணம்மாளும் இந்நிலைக்கு சந்தோஷமடைகிறார்கள்.

ஸ்ரீதரன் சுசியுடன் அதிகமாகப் பழகுவதைப் பார்த்து பயந்த தாயார் தங்கம்மாள் நெடுங்கரை சென்று சாஸ்திரியிடம் ரூபாய் மூவாயிரம் 
வரதட்சணை பணத்தை வாங்கிக்கொண்டு சாவித்திரியை கல்கத்தா அழைத்து வருகிறாள். சாவித்திரி புக்ககத்தில் கொடுமைக்கு ஆளாகிறாள், அவள் தந்தை சம்பு சாஸ்திரியை வறுமை பீடிக்கிறது. சாவித்திரி தந்தைக்கு எழுதிய கண்ணீர் கடிதங்களை மங்களத்தின் தாயார் சொர்ணம்மாள் கிழவி தீக்கிரையாக்கி விடுகிறாள்.

அத்தோடு தங்கம்மாள் சாஸ்திரியை பட்டணம் சென்று சங்கீதம் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும்படி தூண்ட அவரும் மதராஸ் வருகிறார். மங்களம் நெடுங்கரைக்கு பிறந்தகம் போக ஏற்பாடு நடக்கிறது.

எட்டு மாத கர்ப்பிணியான 
சாவித்திரியை வழிப்போக்கர் 
துணையுடன் ரயிலேற்றி நெடுங்கரைக்கு அனுப்புகிறார்கள். ஊரில் வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்ட சாவித்திரி,  மதராஸில் சம்பு சாஸ்திரியைத் தேடி அலைகிறாள்.

மதராஸ் மீனாட்சி மருத்துவமனையில்  அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது,பிறகு அவள் திக்கற்றவளாய் அலைந்து முடிவில் தற்கொலை செய்து உயிர் துறப்பதென்று தீர்மானித்து குழந்தையுடன் ஆற்றில் விழப்போகும் சமயம் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் வேலைக்கு, வீடு வீடாய் அலைந்து வேலை கிடைக்காமல் சலித்துப்போன சம்புசாஸ்திரி பாடும் குரல் அங்கே கேட்கிறது.

சாவித்திரி அது தன் தகப்பனார் என்று தொலைவில் இருந்து உணர்கிறாள், நிதானித்திருந்தவள் சம்பு சாஸ்திரி அயர்ந்திருக்கும் வேளையில் உறங்கும் குழந்தையை அவர் பக்கத்தில் விட்டுச் செல்கிறாள்.

சம்பு சாஸ்திரியின் ஊழியனாக நெடுங்கரை கிராமத்தில் வேலைபார்த்து வந்த நல்லான் தன் மைத்துனன் மூலம் சாஸ்திரி சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவர் ஞாபகமாக இருக்கும் போது, சம்பு சாஸ்திரி கையில் ஒரு குழந்தையுடன் சென்னை சாவடிக்குப்பத்திலுள்ள நல்லான் வீட்டிற்கே வந்து சேருகிறார். 

விசுவாசமுள்ள ஊழியன் நல்லான் வற்புறுத்தவே அவர் குழந்தையுடன் அங்கேயே தங்குகிறார். குழந்தைக்கு சாரு என்று பெயர் வைக்கிறார், பேபி சரோஜா தான் இந்த குழந்தை நடசத்திரமாக தோன்றியுள்ளார்.

இப்படியே ஆறு வருஷங்கள் செல்கின்றன. குழந்தை சாரு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து, கொஞ்ச நாளில்  நாட்டியத்தில் நல்ல பெயர் வாங்குகிறாள்.

பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்த இளம் புரவலர் உமாராணி மதராஸ் மாநகராட்சி மேயரால்  கோலாகலமாக வரவேற்கப்பட்டு, மீனாக்ஷி மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கிறார். 
அவர் வேறு யாருமல்ல சம்பு சாஸ்திரிகளின் பெண் சாவித்திரி தான் அந்த உமாராணி,
பம்பாயில் இருந்த அவரின்  அத்தையின் சொத்து உமாராணியைச் சேர்ந்திருக்கிறது, ஏன் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டார் என சொல்லப்படுவதில்லை.

மீனாட்சி  மருத்துவமனையை பார்வையிட வரும் உமாராணியை வரவேற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் மருத்துவமனை ஊழியர்கள் செய்து கொண்டிருக்கும்போது, 

சிறுமி சாரு தன் பள்ளிக்கூடத்தில்  தலைமை ஆசிரியையால் அடித்து  காயப்படுத்தப்பட்ட ஜூலி என்று தான் பெயரிட்ட  நாய்க்குட்டியுடன் அங்கே முதலுதவி வேண்டி வந்து சேருகிறாள்,அவளை ஊழியர்கள் அப்புரம் வா எனத் துரத்துகின்றனர். 
சாரு வெளியில் தள்ளப்படும் சமயம் உமாராணியைச் சந்தித்து தன் நாய்க்குட்டிக்கு சிகிச்சை செய்ய சிபாரிசு செய்யும்படி மன்றாடி  வேண்டுகிறாள். 

உமாராணி சிறுமியின் கோரிக்கைக்கிணங்கி நாய்க்குட்டிக்கு சிகிச்சை செய்தும் அது உடனே மருத்துவமனையில் இறந்து விடுகிறது. உமா ராணிக்கு அவள் அறியாமல் சிறுமி சாரு மீது ஒரு பாசம் ஏற்படுகிறது. உமாராணி, தான் வேறு நாய்க்குட்டி வாங்கித் தருவதாகச் சொல்லியும் சாரு அழுதபடி வெளியில் ஓடி விடுகிறாள்.

அது முதல் உமாராணி சிறுமி சாருவின் ஞாபகமாகவே இருக்கிறாள். சாருவின் பள்ளிக்கூட கட்டிட நிதிக்காக நடக்கும் நாடகத் துக்கு உமாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அன்று நடந்த சாருவின் நடனம் உமாராணியை பரவசப்படுத்தி மருத்துவமனையில்  நடந்த சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. உமாராணி சாருவின் 
இருப்பிடத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, மறுநாள் ஒரு நாய்க்குட்டியுடன் சாரு வீட்டிற்கு வருகிறார் உமாராணி.

சம்புசாஸ்திரிகளுக்கு, உமாராணியின் நளினமான அலங்காரங்களால் அவர்  தன் பெண் தான் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. 

ஆனால் உமாராணிக்கு சம்பு சாஸ்திரிகளை தெரிந்த போதிலும் தன்னை அடையாளம்  கொள்ளாதபடி நடை உடை பாவனைகளால் நடந்து கொள்ளுகிறாள். 

உமாராணி இனி சாருவை வளர்ப்பதாகக் கூறுகிறார்,  சாருவுக்கு அதுவே நல்லது என்று சாஸ்திரி சாருவைத் தருகிறார். சிறுமி சாருவும் இஷ்டமுடன் உமாவுடன்போக சம்மதிக்கிறாள், உமா சாருவை சீரும் சிறப்புமாக  வளர்த்து வருகிறாள். 

சிறுமி சாரு தன்னை விட்டுப்பிரிந்தபிறகு சம்பு சாஸ்திரி தேசத் தொண்டு புரிவதில் ஊர் ஊராய்ச் சென்று காலங் கழிப்பதாகத் தீர்மானித்தவ்வர், அன்று நடுநிசியில் குப்பத்தை விட்டுக் கிளம்பும்போது, சிறுமி சாரு தன் தாத்தாவைப் பார்க்கவேண்டி ஆவலுடன் சாவடிக் குப்பத்துக்கு வந்து சேருகிறாள். இருவருமாக அங்கே  குப்பத்தைவிட்டுக் கிளம்புகிறார்கள்.

சாருவைக் காணாமல் தேடி அலைந்து, அவளைக் கண்டுபிடிக்கும் விஷயமாக உமா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த இடத்தில் ஸ்ரீதரன் ஏமாற்றுக் குற்றம் சாட்டப்பட்டு விலங்குமாட்டி அங்கே கொண்டு வரப்படுகிறான், இரக்கம் கொண்ட உமா கணவன் ஸ்ரீதரனை அந்தக் ஏமாற்று வழக்கில் இருந்து பெரும் பொருள் செலவிட்டு மீட்கிறார்.

ஸ்ரீதரன், உமாராணி தான் சாவித்திரி என்பதைத் தெரிந்து கொண்டு, அவளிடம் தன் கடந்தகால இழிவான செய்கைகளுக்கும் பாராமுகத்திற்கும் மன்னிப்புக்கேட்டு தன்னுடன் சேர்ந்து வாழும்படி மன்றாடுகிறான்.

உமா இப்போது ஸ்ரீதரனை நிராகரிக்கிறாள், கோபத்தினால் ஸ்ரீதரன் உயர்நீதிமன்றத்தில்  சாவித்திரி பேரில் தாம்பத்ய உரிமை கோரி  வழக்காடுகிறான்.

நீதிபதி இனி ஒழுக்கமாக வாழவேண்டும் என்று இருவரையும் சேர்த்து வைக்கிறார்,  சம்பு சாஸ்திரியும், சாருவும், சாவித்திரியுடன் வந்து சேருகின்றனர்,

தேச அடிமைத்தனத்தை ஒழித்து சுதந்திரத்தை நிலை நாட்டுவதில் உமாராணி ஊக்கத்தை நாம் கண்ணுறுகிறோம், தேச பக்தர்கள் சுதந்திரப் போராட்டத்தில்  ஈடுபட்டு வெற்றியடைந்து சாவித்திரிக்கும் ஸ்ரீதரனுக்கும் தோன்றும் தியாக சிந்தனையையும், அவர்களைப் பின்பற்றி சம்புசாஸ்திரி, சாரு இருவர்களின் தியாகத்தையும் தியாகபூமி திரைப்படம் விவரித்து நிறைகிறது.

இப்படத்துக்கு பாபநாசம் சிவன், மோதிபாபு, கல்கி ஆகிய மூவர்  இசை அமைத்துள்ளனர், பாடல் வரிகளை பாபநாசம் சிவன் மற்றும் ராஜகோபால ஐயர் எழுதியுள்ளனர்.  பாடகர்கள் பேபி சரோஜா, எஸ்.டி.சுப்புலட்சுமி, பாபநாசம் சிவன், வத்சலா.  படத்தின் ஒரே பின்னணிப் பாடகி D.K. பட்டம்மாள் மட்டுமே. அப்போதைய படங்களில் பரதநாட்டியம் வந்ததில்லை.  பாபநாசம் சிவன் "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" படத்தின் தமிழ் பதிப்பை எழுதி இசையமைத்துள்ளார்.  

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் கடைசி தேவதாசி கவுரி அம்மாள் அவர்களிடம் பேபி சரோஜா பரத நாட்டியம் கற்றார்.  

இப்படத்தில் பேபி சரோஜா நடனமாடிய பாடலை அவரது தாயார் வத்சலா (அலமேலு விஸ்வநாதன்) பாடினார்.பாடல்களுடன் தத்ரூபமாக அதன் பின்னணி இசைக்கு ஆர்கெஸ்ட்ராவும் குழுவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,
படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இருந்துள்ளன.

இப்படம் யூட்யூபில் உள்ளது  கடைசி ரீல்  இல்லாத பிரதியே காணக்கிடைக்கிறது, சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமா கடந்து வந்த வரலாற்றிற்காக பார்க்க வேண்டிய படம் இது.
https://youtu.be/y6tOkfJW86I

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)