நம்மில் பலருக்கும் Stilt Floor என்றால் Parking Floor அல்லது தரைத்தளம் என்று என்று தெரியும்,இங்கு liftlobby,staircase,electrical room அமையும்.
ஸ்டில்ட் பார்க்கிங்கின் உயரம் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை இருக்கும்,
தரைத்தளம் Car Parking இன்றி அமைகையில் , சுற்றிலும் சுவர் அல்லது structural glazing செய்து மூடுகையில் Ground Floor என்றும் அழைக்கப்படுவதுண்டு,
இந்த Stilts என்பதன் அர்த்தம் நேரடியாக பொய்க்கால் ஆட்டகலையில் கலைஞர்கள் காலில் அணிந்து நடக்கும் பொய்ங்கால் கட்டைகளான stilts ஐயே குறிக்கிறது, எனவே எங்கே எல்லாம் கட்டிடத்தின் தூண்கள் கட்டிடத்தை தாங்கி நிற்பது போல அமைகிறதோ அந்த தளத்தை Stilts Floor என அழைக்கின்றனர்,
ஒரு பத்து வருட அனுபவமுள்ள பொறியாளருக்கு Stilts Floor என்பதன் அர்த்தம் தெரியாமல் விழிக்கவே அவருக்கு parkinking floor என்றேன், புரிந்தது, அவருக்கு இதமாக சொல்லித்தந்தேன், அவர் மிகவும் நன்றி சொன்னார், இந்த அறிவு பலருக்கு உதவும் என்று பதிவிடுகிறேன், உதாரண இணைப்பு படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கவும்.
PS: அதே போலவே Mezzanine Floor பற்றியும் அறிவோம்.
பாதி தளம் அல்லது அரை தளத்திற்கு இத்தாலி மொழியில் இருந்து பிறந்த terminology இந்த Mezzanine.
Mezzanine என்பது இத்தாலிய வார்த்தையான மெஸ்ஸாவிலிருந்து வந்தது,
உதாரணமாக இத்தாலி உலக சினிமாவான 8 1/2 க்கு இத்தாலி பதிப்பின் பெயர் "Otto e mezzo"
அதாவது otto என்றால் எட்டையும் e என்றால் மற்றும் mezzo என்றால் "பாதி" அல்லது அரை என கொள்க,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தளங்களில் பெயர் வழங்குதலுக்கு இந்த Mezzanine என்ற சொல்லாடல் அரை அல்லது பாதி உயரமுள்ள தளங்களுக்கு நூற்றாண்டுகளாக வழங்கப்படுகிறது.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3