இந்த காதல் திரைப்பட பாணி சம்பவம் 2002 ஆம் ஆண்டு நடந்தது,தன் வீட்டில் டிரைவராக இருந்த இந்தியர் காதர் பாஷா மீது காதல் வயப்பட்ட குவைத்திப் பெண் தலால் ஃபலாக் அல் அஸ்மி அவரை எப்படி பட்டாவது மணக்க நினைக்கிறார், ஆனால் கடுமையான சமுதாய ஏற்றத் தாழ்வுகளும்,
ஒரு குவைத்திப் பெண் தவறிழைத்தால் அங்கே சமூகத்தாரால் தரப்படும் கொடிய கல்லெறிந்து கொல்லும் தண்டனை முறையும் அச்சுறுத்த , தன் வீட்டில் வேலை செய்த இந்தியப் பணிப் பெண்ணின் பாஸ்போர்ட்டைத் திருடி தன் போட்டோவை ஒட்டி துணிகர மோசடி செய்து ஏர்இந்தியா விமானத்தில் சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்குகிறார்.
குடியுரிமை சோதனை அதிகாரிகள், அவரிடம் சுய விபரங்கள் கேட்க, அவருக்கு அரபி மட்டுமே தெரியுமாதலால் சந்தேகம் உறுதியாக அவரையும் காதர் பாஷாவையும் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கும் பதிந்தது குடியுரிமைத்துறை அமைச்சகம்.
அதில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு பெயில் வழங்கவேண்டி, அரசு வழக்கறிஞரையும் போலீஸ் அதிகாரிகளையும் அடக்கி வாசிக்கச் சொன்னார், பின்னர் அப்பெண்ணையும் அந்த டிரைவரையும் பெயிலில் விடுவித்தனர்.
அப்போது விகடன் அந்தப் குவைத்திப் பெண்ணை ஆந்திர மாநில , கடப்பா மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் சென்று காதர் பாஷாவின் வீட்டைக் கண்டு பிடித்து பேட்டி கண்டு வெளியிட்டது,அப்போது இருவருக்கும் மணமாகியிருந்தது, அவர் கருத்தரித்தும் இருந்தார், இன்று 16 வருடங்கள் கழிந்த நிலையில் அந்த ஜோடிகள் நிலை என்ன? என்று தேடுகையில் விபரம் எதுவும் கிடைக்கவில்லை, மீடியாக்கள் அன்றைக்கு சர்ச்சையான செய்தி எதுவோ அது எல்லாவற்றையும் ஹைலைட் மட்டும் செய்யும், ஆனால் ஃபாலோ அப் மட்டும் செய்யவே செய்யாது.
PS: இந்த பதிவில் குவைத் குடில் என்ற ப்ளாக் நடத்தும் நண்பர் திரு .Sheik Gama Aman இட்ட பின்னூட்டத்தில் இந்த காதல் ஜோடிகள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான தகவலைச் சொன்னார், கீழே அவரின் பதிவு
// காதலை வாழவைத்த ஜெயலலிதா!
காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு கடந்த 2002 ம் வருடம் இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய காதல் ஜோடி ஒரு சான்று என கொள்ளலாம் .
தலால் ஆஸ்மி என்ற பெண் குவைத் நாட்டை சேர்ந்தவர். தாயை இழந்தவர். வாழ்கை வசதிகளுக்கு எந்த குறையுமில்லை.
அவரது அப்பாவின் மூன்றாவது மனைவியுடன் அவரும் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இவரது அப்பா மகிழுந்து ஓட்டுனராக ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து காத(ல்)ர் பாஷா என்பவரை அழைத்து வருகிறார்.
காரில் பயணம். அந்தஸ்துகளையும் மீறி இருவருக்கும் காதல் அரும்பியது. ஆனால் குவைத் நாட்டின் சட்டத்திட்டங்கள், தங்களை வாழ்வில் இணைத்து வைக்காது என்பதை உணர்ந்த இருவரும், போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவுக்கு தப்பிவிட திட்டம் போட்டனர்.
இதில் பாதி கிணறை தாண்டிவிட்ட இவர்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர்.
தலால் ஆஸ்மியிடம் இருப்பது போலி கடவுசீட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவரை மட்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைத்து வைத்தனர்.
அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆஸ்மிக்கு சிகிச்சை அளிக்கப்பட, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. அவரை குவைத்துக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய அரசை குவைத் அரசு கேட்கிறது.
தன்னை தன் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ, தன் வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஆஸ்மியை தொற்றிக் கொண்டது.
"என்னை என் நாட்டிற்கு அனுப்பிவீடாதீர்கள், என்னை கொன்று விடுவார்கள்" என்கிறார்.
இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது மட்டுமில்லாமல் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை குரல் கொடுக்கவே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு கருணை அடிப்படையில் பிணையில் விடுதலை பெற செய்தார்.
அப்போது குவைத் தூதரக அதிகாரி தலால் ஆஸ்மியின் வழக்கறிஞரைக் கூடபார்க்க தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
பின்னர் காதல் ஜோடிகளை அழைத்து, முதல்வர் ஜெயலலிதா பரிசு பொருட்களை வழங்கி உபசரித்தார்.
பிறகு தலால் ஆஸ்மி காதலனுடன் வாழ ஆந்திராவில் உள்ள கடப்பா சென்றுவிட்டார். இவர்களை அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் அழைத்து சில உதவிகளை செய்தார்.
இந்தியரை நம்பிவந்த குவைத் பெண்ணுக்கு சிறப்பாக வாழ இந்தியாவில் பெருமளவு உதவி கிடைத்தது.
ஆந்திர அரசு காதருக்கு அரசு வேலை கொடுத்தது. தலால் ஆஸ்மிக்கு ஒரு தனியார் பள்ளிக்கு வேலை வழங்க சொல்லி சிபாரிசு செய்தது.
தற்போது அவர்களுக்கு காதலின் சின்னமாக இப்றாஹிம் என்கிற மகன் உள்ளான்.♥
https://kuwaitkuyil.blogspot.com/2014/02/blog-post.html?m=1
//
https://m.rediff.com/news/2002/apr/06jafri.htm