இந்த காணோளியை இங்கே பாருங்கள்
இது மௌளனராகம் படத்தில் மனோகர் ( கார்த்திக் ) அத்தியாயத்தின் climax காட்சியின் பின்னணி இசை,இசைஞானி இந்த காட்சிகளைப் பார்த்து விட்டு எத்தனை தாக்கம் வருமாறு பின்னணி இசை சேர்த்துள்ளார்,
இந்தக் காட்சியை இசையின்றி பார்த்தேன் எனக்கு ஒரு தாக்கமும் ஏற்படவில்லை, இசையுடன் பார்த்தால் அங்கே மனோகர் திவ்யா என நிஜ மனிதர்களாக முன் நிற்கின்றனர்,
goose bumbs வருகிறது என்றால் மிகையில்லை,அந்த சூழலின் உணர்ச்சிகளை prominent ஆக நமக்கு கடத்துகிறார் இசைஞானி, இந்த encounter காட்சியை ராஜாஜி ஹாலில் எடுத்திருப்பார்கள்,கார்த்திக்கின் காஸ்ட்யூம்ஸ் 35 வருடங்கள் கடந்தும் இன்றும் outdate ஆக வில்லை பாருங்கள்,white cotton full shirt,double pocket, dark blue straight pocket denim,black & white sports shoe .
மனோகர் படியேறியவர் சுடப்படுகையில் rear, front என்று காட்சி முதுகில் துளைக்கும் நெஞ்சில் வெளியேறும் தோட்டாவைக் காட்டுகிறது, பின்னர் top angle அவர் சரிந்து படிகளில் உருள்வதைக் காட்டுகிறது, PC ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு.
இந்த லிங்கில் இரண்டு இசை ஆர்வமிக்க சகோதரர்கள் இருவர் இரண்டு கீபோர்ட்களில் வாசித்து fan cover செய்திருந்தனர், இரண்டையும் பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2891298254297006&id=100002505786472
#மௌனராகம்,
#pc_ஸ்ரீராம், #திவ்யா,#மனோகர்,#இசைஞானி,#மணிரத்னம்,#ராஜாஜி_ஹால்