தமிழ்சினிமாவின் பெருமைமிகு  ஒளிப்பதிவாளர் காலஞ்சென்ற B.S.லோகநாத் அவர்கள்,அபூர்வ ராகங்கள் திரைப்படத்துக்கு தேசிய விருது பெற்றவர் ,கவிதாலயாவில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக சேரும் முன் 1963 ஆம் ஆண்டு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆசை அலைகள் படத்தில் வரும் credit.
இன்றைய வளசரவாக்கம் விஜயா ஹாஸ்பிடல் வளாகத்தில் அன்று இருந்த விஜயா வாஹினி ஸ்டுடியோஸில் B.S.லோகநாத் மற்றும் B.நஞ்சப்பா கம்பெனி உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்ததால் கம்பெனி பெயரையும் அடைப்புகுறிக்குள் தந்துள்ளனர்.
உத்தரவின்றி உள்ளே வா 1971 , திக்கு தெரியாத காட்டில் 1972 முடித்ததும் அவர் 1973 ஆம் ஆண்டு
அரங்கேற்றம் படத்துக்கு  கவிதாலயா வந்தார் அது முதல் கவிதாலயாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆகிப்போனார். 
 
  
 
  
 
 
 
 
 
 
