சிநேகிதரில் நல்ல சிநேகிதர் கெட்ட சிநேகிதரே இல்லை, உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என்பதே சரியாக இருக்கும்.
நம் உயர்ச்சிக்கு எப்படி நாமே பொறுப்போ, நம் வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பு.
தலைவர் ஆரோக்கியமாக இருப்பதால் அரசியலில் குதித்து சேவை செய்தால் சும்மா அதிரும்.
தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் ஆப்பம் பாயா சிக்கன் 65 சாப்பிடுபவர்களை பகடி வதை செய்வது தவறு, உணவு தீண்டாமை இது என்பதை தலைவர் உணர வேண்டும்.
தலைவர் ஆரோக்கியமாக இருக்க முதற்காரணம் தலைவரின் குடும்ப மருத்துவர்,தலைவரின் இந்தியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Nephrologists, தலைவரின் nutritionist என இந்த பட்டியல் நீளும்.
மருதநாயகம் திரைப்படத்தில் கமல்ஹாசன் பாறையை உருட்டியபோது , எருமை மாடு மீது அமர்ந்து பயணித்த போது அவருக்கு வயது 43 , விருமாண்டியில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குகையில் அவருக்கு வயது 50, மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் மரணக்கிணற்றில் வாகனம் ஓட்டி சாகசம் செய்து அந்தரத்தில் பறந்து சுவரில் மோதி இடுப்பெலும்பை உடைத்துக் கொண்ட போது அவருக்கு வயது 51, 34 ஆம் முறையாக அவருக்கு நிகழ்ந்த எலும்பு முறிவு அது, அவர் அசைவ உணவு ஆர்வலர், அவரே சமூகத்திற்கு உணவு போஷாக்கு பற்றி பாடமெடுக்க முழுத்தகுதி கொண்டவர் , ஆனால் நம் தலைவர் சைவ உணவை மட்டும் உயர்த்திப் பிடிப்பது போல பேசுவது சரியல்ல என்பதை அவரை சுற்றி உள்ளவர்கள் அவருக்கு புரிய வைக்க வேண்டும்.