1000 சதுர அடி கொண்ட சிறிய வீட்டு மனைகளில் 1'6" மட்டுமே இடைவெளி விட்டு கட்ட சாத்தியமிருக்கும், அவ்வாறு குறைந்த set back களில் காம்பவுண்டு சுவர் அமைப்பது மிகுந்த சவாலானது, அதற்கு படத்தில் உள்ள perforated sheet cladded காம்பவுண்டு சுவர் மிகவும் பொருத்தமானது, இதன் மொத்த கணம் இரண்டு அங்குலம் மட்டும் வரும் , powder coated 2" x2" tube section vertical post 10' c/c இடைவெளியில் 9"x9"x9" காங்ரீட் ப்ளாக் அடிக்கல் நாட்டி அதன் மீது vertical post அடியில் உள்ள Rosette plate ஐ 4 எண்ணிக்கையில் bolt செய்து விடவேண்டும்.உறுதியாக ஆடாமல் நிற்கிறது.
அதன் மேலும் கீழும் powder coated1"x1" tube section horizontal transoms , அதில் வார்க்கப்பட்டு வெல்ட் செய்யப்பட்ட 2 மிமீ powder coated perforated sheets (மெல்லிய துளைகள் கொண்ட ஷீட்) இத்தனை தான் தேவை, எளிமையான வடிவமைப்பு, கீழே மண் அரிக்காமல் இருக்க 6 " உயரம் கொண்ட இடைவெளி போதும், யாரும் அந்த இடை வெளியில் புகுந்து வர முடியாது.
இந்த perforated sheet cladded காம்பவுண்டு சுவரை நான் தம்ம சேதுவில் கண்டேன், இது பெண்கள் தங்கியிருக்கும் வளாகத்தின் வெளியே வேயப்பட்ட சுவர், மிகுந்த functional ஆகவும் செலவு குறைவாகவும் காம்பவுண்டு சுவர் அமைத்துள்ளனர், வெயில் மழை என இருபது வருடங்கள் நின்று தாக்குப் பிடிக்கிறது.வருடா வருடம் சிறிய மராமத்துகள் செய்தால் போதும்.
நாமும் இப்படி எளிமையாக அமைக்கலாம்,அந்தப் பக்கம் நின்று பார்த்தால் நிழலாடுவது மட்டும் தெரியும், இந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அதே தான்.தடுப்பும் பார்க்க contemporary look தருகிறது.
Ps: இதை முழுக்க powder coated ஃபினிஷில் செய்தால் 385 ரூபாய் சதுர அடிக்கு வருகிறது,இதை பெயிண்ட் ஃபினிஷ்ஷில் செய்தால் 185 ரூபாய் சதுர அடிக்கு செய்ய முடியும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339