சில கட்டிடங்களுக்கு விதிமுறைகள் setback car parking fire safety என எதுவும் தேவையில்லை,கோவணம் போன்ற corner மனையில் சுற்றி ஒரு அடி கூட இடம் விடாமல் G+3 கூட கட்டலாம்,எந்த இரும்புக்கரமும் பாயாது, EB, Water connection, sewage connection, house tax என சரியாக பழம் நழுவி பாலில் விழுந்தது போல உரிமையாளர்கள் வாயில் விழுந்துவிடும்.
ஏற்கனவே நமது பிரதான சாலைகள் மிகவும் குறுகலானவை, இப்படி போதிய பார்க்கிங் வசதியில்லாமல் கட்டிடம் கட்டுகையில் அங்கு புதிதாக குடியேறும் உரிமையாளர்கள், அவர்களை பார்க்க வருபவர்கள் தெருவில் கார்,பைக் இவற்றை நிறுத்த வழிவகுக்கும், 1BHK என்றால் 1 பார்க்கிங் 8'x16'6" அளவில் தரவேண்டும், 2BHK என்றால் 2 பார்க்கிங் 8'x16'6" அளவில் தரவேண்டும் என்பது விதி, குறைந்தது சாலை புறம் 3' setback விட வேண்டும் என்பது விதி,
அப்படி setback விடாமல் கட்டுகையில் ambulance ,fire engine என எதற்கும் turning radius இராது , எளிதாக திருப்பி வெளியேறும் வழி இராது, கட்டிடத்தை விபத்தில் சேதப்படுத்த நேரும், அல்லது தற்காலிகமாக தீயணைப்பின் போது இடிக்க நேரும்,கார்னர் கடை தான் கூட்டம் அம்மும், அதனால் தான் பெயரே Corner Tea Stall என வைப்பர் , டீ பஜ்ஜி தின்ன அத்தனைபேர் வாகனத்தை சாலையில் நிறுத்தி வாகன நெரிசல் ஏற்படுத்துவர்.