இந்த ரயில் தண்டவாளம் வேயப்பட்ட ஆலப்புழா கடல் பாலம் நூற்றாண்டு பழமையானது, கேரளத்தின் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்றது , 1990 களில் கடல் சீற்றம் மற்றும் அரிப்பில் முறையான பராமரிப்பின்றி இன்று சுத்தமாக அழிந்து போய்விட்டது, இணைப்பு படங்களைப் பாருங்கள். (இதே போல பாண்டிச்சேரி கடலிலும் இருந்த பாலமும் கடல் அரிப்பில் சுத்தமாக அழிந்து போய்விட்டது.)
ஒரு திரைப்படம் ஸ்டுடியோவிற்குள் செட் அமைத்து எடுக்காமல் பொதுவெளியில் இது போல அனுமதி வாங்கி படமாக்குகையில் அது கடந்தகாலத்தின் சாட்சியாகிறது, வரலாற்று ஆவணமாகிறது,இன்று இந்த கடல் பாலம் வெறும் நினைவுகள் மட்டுமே, இணைப்பில் உள்ள எல்லா படங்களையும் பார்த்தால் நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை மிகவும் புகழ்பெற்றது,இங்கு தினசரி கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன, திறந்தவெளி அரங்கம் மற்றும் கலைநயத்துடன் கூடிய நீண்ட நடைபாதை, பசும்புல்வெளிகள், செடிகள், மக்கள் அமர்ந்து காட்சி மற்றும் கடல் காற்றை ரசிக்க இருக்கைகள் உள்ளன, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் ஆலப்புழா கடற்கரை .
இக்கடற்கரையில் வைத்து இயக்குனர் ஃபாஸிலின் பூவினு புதிய பூந்தென்னல் திரைப்படத்தின் இறுதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது, நாம் காணும் இந்த கடல் பாலம் கரையில் இருந்து 1000 அடி நீளமுள்ளது, சுமார் 137 ஆண்டுகள் பழமையானது. 1862 ஆம் ஆண்டில் Captain Hugh Crawford என்பவரால் கட்டப்பட்டது, இது பல தசாப்தங்களுக்கு முன்பு வர்த்தகம் வளரத் துவங்கி செழித்திருந்தபோது கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
இப்போது பாலத்தின் தரையில் வேய்ந்திருந்த தரையில் இருந்த இரும்பு பட்டைகள் , கிராதிகள் குறுக்கு உத்திரங்கள் , தடுப்பு வேலிகள் , narrow கேஜ் ரயில் தண்டவாளம், ஸ்லீப்பர் கட்டைகள்,guard house, check post,விளக்கு கம்பம் என எதுவும் இல்லை.
இரும்புத் தூண்கள் மட்டும் துரு ஏறி பாழடைந்த நிலையில் நீரிலும் மணலிலும் காணலாம்,
கப்பல்கள் நடுக்கடலில் இரண்டு நாட்டிகல் மைல் தூரத்தில் தங்கிவிட அதில் இருந்து சரக்குகள் மசுலா படகுகளில் ஏற்றப்பட்டு இந்த கடல் பாலம் வந்தடையும், சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டு warehouse கொண்டு செல்லப்பட்டது வரலாறு. அன்று நடந்த வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக இருந்தது இந்த கடல் பாலம்.